கோவையில் விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய லாரன்ஸ்; கருப்பு எம்ஜிஆர் என புகழ்ந்த மக்கள்
மாற்றம் என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வரும் நடிகர் லாரன்ஸ் இன்று கோவையில் விவசாய கிராமத்திற்கு டிராக்டரை பரிசாக வழங்கினார்.
நடிகரும், பிரபல நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அண்மையில் மாற்றம் என்ற அறக்கட்டளை ஒன்றை புதிதாகத் தொடங்கி உள்ளார். இந்த அறக்கட்டளை மூலமாக தொடர்ந்து ஏழைகளுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில், கோவை தொண்டாமுத்தூர் பகுதி தேவராயபுரம் கிராமத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் விவாசயம் செய்ய டிராக்டர் வழங்குகினார்.
SSLC Exam Result: தமிழ் தவிர்த்து அனைத்து பாடங்களிலும் சதம் விளாசிய மாணவிகளுக்கு குவியும் பாராட்டு
ஊர் மக்கள் அவருக்கு மேலதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து கருப்பு எம்.ஜி.ஆர் என கோஷமிட்டனர். அப்போது பேசிய அவர், நான் செய்யும் இந்த சேவை மூலம் அனைவருக்கும் சேவை எண்ணம் தோன்றினால் போதும். என்னை கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லி கோர்த்துவிடாதீர்கள் என அவர் மேடையில் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் செல்லும் இடத்தில் சில பேர் என்னை, அன்னை தெரேசா, எம்.ஜி.ஆர் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் இதயத்தில் வைத்து கொள்வேன். தலையில் வைத்து கொள்ளமாட்டேன். விவசாயம் வளர வேண்டும். ஏழை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் எங்களுடன் இணைந்து பணியாற்றி சேவை செய்பவர்கள் எங்கள் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.