ரூ. 6.5 கோடி மதிப்பிலான தங்க நகை கையாடல்; நகைக் கடை ஊழியர் மீது வழக்குப் பதிவு!!
நகைக் கடைகளுக்கு விநியோகம் செய்ய வந்த 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கையாடல் செய்ததாக நகை கடை ஊழியர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மீது வெரைட்டி ஹால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரை தலைநகரமாகக் கொண்டு 25 வருடமாக இயங்கி வருவது அன்மோல் ஜுவல்லரி. பிரபல நகைக்கடைகளுக்கு ஆபரணங்கள் தயாரித்து மொத்த விலையில் விற்பனை செய்வது அன்மோல் ஜூவல்லரி வழங்கி வருகிறது. இந்த ஜுவல்லரியில் அனுமன் துவேசி ஊழியராக பணியாற்றுகிறார். இவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்.
பெங்களூரில் உள்ள மொத்த வியாபார நகைக்கடையான அன்மோல் ஜுவல்லரியில் இருந்து நகைகளை எடுத்து வந்து கோயம்புத்தூர் நகைக்கடைகளுக்கு விநியோகம் செய்வது இவரது பணி. பெங்களூரில் தயாரிக்கப்படும் நகைகளை பத்திரமாக கொண்டு வந்து கோவையில் ஆர்டர்கள் பெறப்பட்ட நகை கடைகளில் ஒப்படைத்து விட்டு அதற்கான ரசீது பெற வேண்டும். இதுதான் அனுமன் துவேசியின் வேலை.
பூண்டி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி, இருவர் மாயம்
இந்த நிலையில் கடந்த மாதம் பெங்களூரில் இருந்து கோயம்புத்தூருக்கு விநியோகம் செய்ய நகைகள் கொண்டு வந்துள்ளார். ஆனால், ஆர்டர் எடுத்த நகைக் கடைகளுக்கு நகைகளை கொடுக்கவில்லை. இந்த நிலையில் ஆர்டர் எடுத்த கோயமுத்தூர் நகைக் கடைகளை அணுகி, இன்னும் பணம் வரவில்லை என்று அன்மோல் ஜுவல்லரி உரிமையாளர் சக்னால் காட்ரி கேட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, நகைகளை கொண்டு வந்த அனுமன் தூவேசிடம் நகைகளின் விநியோகம் குறித்தும் விளக்கம் கேட்துள்ளார்.
ஆனால் நகைக்கடை உரிமையாளர் கேள்விக்கு அனுமன் துவேசி முறையான பதிலை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அன்மோல் ஜுவல்லரி கடை உரிமையாளர் காட்ரி வெரைட்டி ஹால் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில், 13.5 கிலோ எடையுள்ள ரூ. 6.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அனுமன் துவேசி கையாடல் செய்ததாக தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை பிறந்து 10 நாட்களில் பணிக்கு திரும்பிய தாம்பரம் மேயர் - பொதுமக்கள் நெகிழ்ச்சி
ஆர்டர்கள் கொடுத்த நகைக் கடைகளுக்கு விநியோகம் செய்யாமல் நகைகளை அனுமன் துவேசி கையாடல் செய்தாரா அல்லது நகை விநியோகம் செய்ய வந்த அனுமன் துவேசியை வேறு யாரேனும் ஏமாற்றினார்களா என்ற கோணத்தில் வெரைட்டி ஹால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடந்து வருகின்றனர்.