கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்து இருக்கிறது கோட்டூர் மலையாண்டிபட்டினம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கார்த்தி(23). இவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (23). இருவரும் நண்பர்கள் ஆவர். கார்த்தியின் தம்பிக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். அதைகொண்டாட நண்பர்கள் இருவரும் மீனாட்சிபுரத்திற்கு பைக்கில் சென்றிருந்தனர். அங்கு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் மீண்டும் வீடு திரும்பினர்.

இருசக்கரவாகனத்தை ஆனந்தகுமார் ஓட்டியிருக்கிறார். வளந்தாயமரம் பகுதி அருகே இருவரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையின் எதிரே மற்றொரு இருசக்கர வாகனம் வந்துள்ளது. அதில் பொள்ளாச்சி அருகே இருக்கும் போடிபாளையத்தைச் சேர்ந்த அசோக்மணி (18), கார்த்திகேயன்(17) ஆகியோர் வந்துகொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. 

இதில் நான்குபேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். ஆனந்தகுமார் மற்றும் கார்த்திகேயன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடித்துதுடித்து பலியாகினர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மற்ற இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சைபலனின்றி அசோக் மணி பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திக்குக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலி பட்டியலின சான்றிதழில் அரசு அதிகாரியான மனைவி..! போட்டுக்கொடுத்து வேலைக்கு ஆப்பு வைத்த கணவர்..!