பாதயாத்திரையில் சோகம்; வாய்காலில் விழுந்த சிறுவன், காப்பாற்ற முயன்ற நபர் நீரில் மூழ்கி பலி
கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இருவர் பழனிக்கு பாதயாத்திரை சென்றபோது வாக்காலில் விழுந்து அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே உள்ள பெரிய குயிலி பகுதியை சேர்ந்தவர்கள் மாகாலிங்கம் 37, கோபிநாத் 17. இவர்கள் இருவரும் பழனியில் நடைபெறும் தை பூச விழாவிற்கு செல்ல குழுவாக பாதயாத்திரை சென்றுள்ளனர். நேற்று மாலை அக்குழுவினர் பல்லடம் உடுமலை சாலை பச்சார்பாளைம் பி ஏ பி வாய்க்கால் பகுதியை கடந்துள்ளனர். அப்போது வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் இறங்கி சிலர் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் கோபிநாத் 17 தண்ணீரில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த மாகாலிங்கம் சிறுவனை காப்பாற்ற வாய்க்காலில் குதித்துள்ளார். வாய்க்காலில் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததாலும், வேகம் அதிகமாக இருந்ததாலும் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் காமநாயக்கன்பாளையம் காவல் துறையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை வாவிபாளையம் பி ஏ பி வாய்க்காலில் சடலம் ஒன்று மிதந்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் மற்றும் பல்லடம் தீயணைப்புத் துறையினர் மிதந்து வந்த சடலத்தை மீட்டு விசாரித்த போது அந்த உடலானது நேற்று மாலை வாய்க்காலில் தவறி விழுந்த கோபிநாத் 17 என்ற சிறுவனின் உடல் என்பது தெரியவந்தது. மேலும் இதே போல எஸ் குமாரபாளையம் பி ஏ பி வாய்க்காலில் மேலும் ஒரு ஆண் சடலம் மிதந்து வருவதாக சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
தன்னிலை மறந்து பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவன், பள்ளி மாணவி ரயில் மோதி பலி
இதையடுத்து தீயணைப்புத் துறையினருடன் சம்பவ இடம் விரைந்து சென்ற சுல்தான்பேட்டை காவல் துறையினர் மிதந்து வந்த ஆணின் சடலத்தை மீட்டு விசாரித்ததில் அந்த ஆணின் சடலம் நேற்று தவறி விழுந்த சிறுவனை காப்பாற்ற குதித்த மகாலிங்கத்தின் உடல் என்பது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு உடல்களையும் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்னல் வேகத்தில் சிலம்பம் சுற்றிய அமைச்சர் மனோ தங்கராஜ்; வியந்து பார்த்த அதிகாரிகள்
தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரை சென்ற குழுவில் இரண்டு பேர் வாய்க்காலில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.