கோவை அதிர்ச்சி சம்பவம்.. 11ம் வகுப்பு பள்ளி மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா நெறிமுறைகளை வகுத்து பள்ளிகள் திறக்கப்பட்டாலும், தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.
கோவை அருகே அரசு பள்ளியில் மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா நெறிமுறைகளை வகுத்து பள்ளிகள் திறக்கப்பட்டாலும், தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள தாமரைக்குளத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகள் சிவசுந்தரி (16). இவர் நெகமம் அடுத்த சேரிபாளையம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலையும் வழக்கம் போல் வீட்டில் இருந்து பேருந்து மூலம் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது, வகுப்பறையில் பாடம் கவனித்து கொண்டிருந்த போது திடீரென மாணவி சிவசுந்தரி மயங்கி விழுந்தார். இதனை கண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த மாணவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.