சென்னையில் திருப்பதி தேவஸ்தான திருக்கோவிலை, புதிதாக கட்ட முடிவு.. திருப்பதி தேவஸ்தானம் தகவல்!!
திருக்கோவில் கட்டுவதற்கு இடம் வாங்க நன்கொடை வழங்குமாறு பொதுமக்களிடம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழுவின் தலைவர் சேகர் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
திருக்கோவில் கட்டுவதற்கு இடம் வாங்க நன்கொடை வழங்குமாறு பொதுமக்களிடம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழுவின் தலைவர் சேகர் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவில் புனரமைப்பு பணிகள் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழுவின் தலைவர் சேகர் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்த தாயார் கோவில் கடந்த மார்ச் 14ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுது. தினமும் பத்தாயிரம் பேர் வரை அந்த கோவிலில் தரிசனம் செய்து வருவதாக கூறிய அவர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலையும் தாயார் கோவில் போல் புதுப்பித்து கட்ட வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட நாள் கோரிக்கையாக வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சியில் சுகாதாரமற்ற முறையில் எண்ணெய் தயாரிப்பு; 4500 லிட்டர் எண்ணெய் பறிமுதல்
அதற்கு போதுமான இடம் இல்லாமல் பற்றாக்குறையாக உள்ளது. இதற்காக பக்கத்தில் இருந்து மூன்று கிரவுண்ட் இடம் வாங்கியுள்ளோம். அது 14 கோடி மதிப்பு தக்கது. மேலும் பக்தர்களிடம் நன்கொடை கேட்கப்பட்டது. அதில் இருந்து தற்போது ஏழு பேர் நன்கொடை கொடுத்துள்ளனர் மொத்தம் 7 கோடியே 60 லட்சம் வந்துள்ளது. தலைவர் என்ற சார்பில் நான் ஒரு கோடியும், ஏ.சி சண்முகம் ஒரு கோடி, டிவிஎஸ் குழுவைச் சேர்ந்த கோபால் சீனிவாசன் ஒரு கோடி, ஜெயராமன் என்பவர் ஒரு கோடி, சமீரா பவுண்டேஷன் ஒரு கோடி, அனுகிரக பவுண்டேஷன் ஒரு கோடி, ஐஸரி கணேஷ் 50 லட்சம் என மொத்தம் 7 கோடியே 60 லட்சம் இதுவரை வந்துள்ளது. இந்த கோவிலை புதுப்பிப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த இடத்தில் மொத்தமாக புதிய கோவில் கட்டப்பட உள்ளது.
இதையும் படிங்க: மோடியா? ஸ்டாலினா? ஸ்டிக்கர் சர்ச்சையால் பயன்பாடின்றி துருப்பிக்கும் புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள்
தாயார் கோவில் ஆவது சிமெண்ட் பூசப்பட்டது. இந்த கோவிலில் சிமெண்ட் இல்லாமல் முழுவதுமாக கற்களால் கட்டப்பட உள்ளது. கோவில் கட்டப்படும் செலவை முழுவதும் தேவஸ்தானம் பார்த்துக்கொள்ளும். இடம் வாங்க தான் நன்கொடை வாங்கப்படுகிறது. தனிநபர் பெயரில் நன்கொடை வாங்குவது கிடையாது. தேவஸ்தான பெயரில் தான் நன்கூடை வாங்கப் பெறுகிறது. பூமி பூஜை இன்னும் ஆறு மாதத்தில் நடைபெற உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகிரராகள். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய முடியாததால் தற்போது புதிய கோவில் கட்டப்படுகிறது. மேலும் ஏழைகளுக்கு திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது. கோவிலில் தினமும் அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போதுமான இட வசதி இல்லாமல் பொறுத்துக் கொண்டு இருக்கிறோம். தினமும் பத்தாயிரம் பேர் வந்தாலும் அன்னதானம் கொடுக்க தேவஸ்தானம் தயாராக உள்ளது. அந்த வேலையும் துரிதமாக நடக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.