Asianet News TamilAsianet News Tamil

மோடியா? ஸ்டாலினா? ஸ்டிக்கர் சர்ச்சையால் பயன்பாடின்றி துருப்பிக்கும் புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள்

மோடி ஸ்டிக்கர் ஒட்டுவதா ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டுவதா என்ற சர்ச்சையால் 250 புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாடின்றி துருப்பிடித்துக் கொண்டிருக்கின்றன.

PM Modi or CM Stalin: Feud over photo grounds 250 animal ambulances in Tamil Nadu
Author
First Published May 30, 2023, 5:16 PM IST

ரூ.39 கோடி செலவில் வாங்கப்பட்ட 250 புத்தம் புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள், பயன்பாட்டுக்கு வராமல் ஐந்து மாதங்களாக பூந்தமல்லியில் உள்ள டீலரிடமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பிரதமர்  மோடியின் படத்தை ஒட்டுவதா அல்லது முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தை ஒட்டுவதா என்ற போட்டிதான் அவை பயன்படுத்தப்படாததற்குக் காரணம் என்று சொல்லப்படுகினது.

இது மட்டுமின்றி இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைப்பது யார் என்பதிலிலும் பிரதமரா முதல்வரா என்ற இழுபறி காணப்படுகிறது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் 100 சதவீதம் மத்திய அரசு நிதியுதவியுடன் வாங்கப்பட்டுள்ளன என்பதால் முதலில் பிரதமர் மோடி படம் மட்டும் வாகனத்தில் ஒட்டப்பட்டது. இது குறித்து சர்ச்சை எழுந்ததால் ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டுக்கு வருவதற்காக ஸ்டாலினின் புகைப்படமும் அருகில் சேர்க்கப்பட்டது.

​தமிழ்நாட்டு கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் எம். லட்சுமி, எந்த அரசியல் காரணங்களுக்காகவும் தாமதம் ஏற்படவில்லை என்று கூறினார். மேலும், செயல்பாட்டுச் செலவுகளுக்கும், ஆம்புலன்ஸ்களை இயக்குவதற்கு உரிய நபர்களை நியமிக்கவும் மத்திய அரசு நிதி வழங்க தாமதிப்பதாவும் தெரிவிக்கிறார்.

Delhi Murder: நாட்டையை உலுக்கிய டெல்லியின் 10 கொடூர கொலை வழக்குகள்

PM Modi or CM Stalin: Feud over photo grounds 250 animal ambulances in Tamil Nadu

"டாக்டர்கள் மற்றும் இதர பணியாளர்களை நியமிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடித்து ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டுக்கு தயாராகிவிடும். விற்பனையாளரை நியமிக்க தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். விரைவில் டெண்டர் கோரப்படும்" என்று அவர் சொல்கிறார்.

இத்திட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு மத்திய அரசு நிதி வழங்கும் என்றும், செயல்பாட்டுச் செலவை மாநில மற்றும் மத்திய அரசுகள் பகிர்ந்து கொள்ளும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு ரூ.19 கோடியும், மத்திய அரசு ரூ.29 கோடியும் செலுத்த வேண்டும். மத்திய அரசும் நிதி பங்களிப்பை வழங்கினால் மட்டுமே தமிழகம் நிதிப் பங்கை வெளியிடும்.

இரண்டு அரசாங்கங்களிடமிருந்தும் நிதி வரவில்லை என்று அதிகாரி ஒருவர் கூறுகிறார். மத்திய அரசு தனது பங்கை வழங்கினால் மட்டுமே தங்களின் பங்கு நிதியை வெளியிடுவோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

9 ஆண்டுகள், 9 சாதனைகள்: பிரதமர் மோடி அரசு செயல்படுத்திய 9 சிறந்த திட்டங்கள்

PM Modi or CM Stalin: Feud over photo grounds 250 animal ambulances in Tamil Nadu

கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய் கட்டுப்பாடு திட்டத்தின் (LHDCP) கீழ், இந்திய அரசாங்கம் 2021 ஆம் ஆண்டில் ஆம்புலன்ஸ் வாங்க ₹39 கோடி ஒதுக்கியது. ஒரு லட்சம் கால்நடைகளுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வழங்க திட்டம் தீட்டப்பட்டது. மாநில கால்நடை பராமரிப்புத் துறை வாகனங்களை 2022ஆம் ஆண்டிற்குள் வாங்கியது. மறுசீரமைப்பு, பதிவு மற்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பிறகு, வாகனங்கள் டிசம்பர் 2022 முதல் பூந்தமல்லியில் உள்ள டீலமிடமே உள்ளன.

ஆம்புலன்ஸ்கள் அனைத்து விலங்குகளுக்கும் சிகிச்சை அளிக்க நவீன உபகரணங்களையும் கொண்டிருக்கும். பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று முகாமிட்டு சிகிச்சை வழங்கும். 1962 என்ற அவசர உதவி எண்ணையும் அறிவித்துள்ளது. கால்நடை வளர்ப்பவர்களிடம் இருந்து அழைப்பு வந்தவுடன், கால்நடை சேவைகளுக்கான ஆம்புலன்ஸ் அவர்கள் இடத்திற்கு விரைந்து செல்லும்.

கொலை வெறியுடன் புதிய கத்தி வாங்கிய ஷாஹில் கான்! டெல்லி சாக்‌ஷி சிங் கொலையின் அதிர்ச்சித் தகவல்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios