crime

டெல்லி படுகொலைகள்

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நாட்டையை உலுக்கிய 10 கொடூர கொலை வழக்குகள் பற்றிய தொகுப்பு இது.

Image credits: Getty

ஷாபாத் டெய்ரி கொலை (2023)

2023 மே 28 அன்று டெல்லியில் சாஹல் 16 வயது சிறுமியை 20 முறைக்கு மேல் கத்தியால் குத்தி, கல்லை தலையில் போட்டு உடைத்தார்.

Image credits: PTI

நிக்கி யாதவ் கொலை (2023)

பிப்ரவரி 10, 2023 அன்று, நிக்கி யாதவ் சாஹில் கெலாட்டால் கொலை செய்யப்பட்டார். சாஹில் அன்று மாலையியே வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

Image credits: Getty

ஷ்ரத்தா வாக்கர் வழக்கு (2022)

ஆப்தாப் பூனாவாலா தனது லைவ்-இன் பார்ட்னர் ஷ்ரத்தா வாக்கரை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றார்.

Image credits: Twitter

நிர்பயா வழக்கு (2012)

டிசம்பர் 16, 2012 அன்று, தெற்கு டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பெண் 6 பேரால் கொடூரமாக தாக்கப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படார்.

Image credits: Getty

ஜிகிஷா கோஷ் வழக்கு (2009)

மார்ச் 18, 2009 அன்று இரவு, வசந்த் விஹாரில் தனது வீட்டிற்கு அருகில் வாகனத்தில் வந்து இறங்கிய ஜிகிஷா கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

Image credits: Getty

சௌமியா விஸ்வநாதன் கொலை (2008)

செப்டம்பர் 28, 2008 அன்று இரவு வசந்த் குஞ்ச், நெல்சன் மண்டேலா மார்க் பகுதியில் பத்திரிகையாளர் விஸ்வநாதன் தனது காரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Image credits: Getty

நிதிஷ் கட்டாரா கொலை (2002)

பிப்ரவரி 17, 2002 அன்று விகாஸ் யாதவ் என்பவரால் நிதிஷ் கட்டாரா படுகொலை செய்யப்பட்டார். கட்டாரா விகாஸ் யாதவின் சகோதரி பார்தி யாதவை காதலித்து வந்தார்.

Image credits: Getty

ஜெசிகா லால் கொலை (1999)

பார்ட்டியில் பார் பணிப்பெண்ணாக இருந்தவர் ஜெசிகா லால். மனு சர்மா கேட்ட மது வகையை ஜெசிகா வழங்கவில்லை. இதற்காக ஜெசிகாவை மனு சுட்டுக் கொன்றார்.

Image credits: Twitter

பிரியதர்ஷினி மேட்டூ கொலை (1996)

ஜனவரி 23, 1996 அன்று சட்டக்கல்லூரி மாணவி பிரியதர்ஷினி மேட்டூ, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

Image credits: Getty

நைனா சாஹ்னி கொலை (1995)

சுஷில் சர்மா, நைனாவை சுட்டுக் கொன்றார். உடலை ஒரு உணவகத்திற்குக் கொண்டு சென்று எரியும் தந்தூர் அடுப்பில் எரிக்க முயன்றார்.

Image credits: Getty