கொலை வெறியுடன் புதிய கத்தி வாங்கிய ஷாஹில் கான்! டெல்லி சாக்‌ஷி சிங் கொலையின் அதிர்ச்சித் தகவல்கள்

டெல்லியில் 16 வயது சிறுமி பலர் முன்னிலையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியான 17 வயது இளைஞர் ஷாஹில் கான் குறித்து அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Delhi murder: Killer Sahil Khan lay in wait for Sakshi; she was taken to hospital 30 minutes later by cops

வடமேற்கு டெல்லியின் ஷாபாத் டெய்ரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 16 வயது சிறுமியைக் கொடூரமாக கொலை செய்த இளைஞர் ஷாஹில் கான் பற்றிய அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் மற்றொரு சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கிடைத்துள்ளன.

சாஹில் கான் அந்தச் சிறுமியைக் காதலித்து வந்ததாவும் சாக்‌ஷியின் கையில் மற்றொரு பையனின் பெயர் பச்சை குத்தப்பட்டதைக் கண்டதும் வெறுப்படைந்து கொலை செய்ய முடிவு செய்தார் என்றும் தெரிகிறது. பல புகைப்படங்களில் கான் இந்துக்கள் அணிவதைப் போன்ற சிவப்பு நூலை கையில் அணிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று போலீசார் கூறுகின்றனர்.

இந்த வழக்கில் விரிவான விசாரணையை தொடங்கியுள்ள டெல்லி போலீசார், உள்ளூர்வாசிகளிடம் விசாரித்ததுடன் ஷாஹில் கானின் சமூக வலைத்தள பக்கங்களையும் பரிசோதித்து வருகின்றனர். அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது அந்தப் பெண் சாஹில் கானிடமிருந்து ஒதுங்கிச் செல்லவே விரும்பினார் எனக் கூறியுள்ளனர். சிறப்பு ஆணையர் டிபேந்திர பதக் கூறுகையில், "இது குறித்துத் தீவிர விசாரணையை நடத்துவோம். குற்றவாளிக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர அனைத்து ஆதாரங்களையும் சேகரிப்போம்" என்று கூறியுள்ளார்.

பதக்கங்களை கங்கையில் வீசி எறிவோம்: டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள் வெளியிட்ட உருக்கமான கடிதம்

Delhi murder: Killer Sahil Khan lay in wait for Sakshi; she was taken to hospital 30 minutes later by cops

இது ஒரு திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா இருப்பதற்கான ஆதாரங்கள் தெரியவந்துள்ளன. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு நீண்ட கத்தியை கான் சமீபத்தில்தான் வாங்கினார் என்று போலீசாருக்குத் தெரியவந்தது. ஆனால், அந்தக் கத்தி இன்னும் கைப்பற்றப்படவில்லை என்கிறார்கள்.

கான் சாக்‌ஷி தன்னிடம் பேசாததால் கோபமாக இருந்ததாகவும், சாக்‌ஷிக்கு பிரவீன் என்ற பழைய நண்பருடன் இருந்த நட்பு அவரை மேலும் பொறாமைப்பட வைத்ததாகவும் சாக்‌ஷியின் தோழி போலீசாரிடம் கூறியுள்ளார். மே 27ஆம் தேதி சனிக்கிழமை இருவருக்கும் இடையே சண்டை வந்த பிறகு, கான் மீண்டும் சாக்‌ஷியுடன் நட்பாக இருக்கமுடியும் என்ற நம்பிக்கையை இழந்து, சாக்‌ஷியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, போலீசாருக்குக் கிடைத்த மற்றொரு சிசிடிவி காட்சிகளில் சாஹில் கான் சாக்‌ஷியைக் கொல்வதற்காக தெருவில் சுற்றித் திரிந்து காத்திருப்பது பதிவாகியுள்ளது. அப்போது அவர் தனது நண்பர் ஒருவருடன் பேசுவதும் அந்த சிசிடிவி பதிவில் இடம்பெற்றுள்ளது. சாஹில் கானுடன் பேசிய அந்த நணபரிடமும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

9 ஆண்டுகள், 9 சாதனைகள்: பிரதமர் மோடி அரசு செயல்படுத்திய 9 சிறந்த திட்டங்கள்

Delhi murder: Killer Sahil Khan lay in wait for Sakshi; she was taken to hospital 30 minutes later by cops

சாக்‌ஷி மார்க்கெட்டுக்குச் சென்றுவிட்டு, நண்பரின் மகன் பிறந்தநாள் பார்ட்டிக்குச் செல்வதற்காக உடை மாற்றிக்கொள்ள பொது கழிப்பறைக்குச் சென்றார். அவர் அங்கிருந்து வெளியே வந்தவுடன், சாஹில் கான் பின்தொடர்ந்து போயிருக்கிறார். இரவு 8.40 மணியளவில் E பிளாக் பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு பாதையில் சாக்‌ஷியைத் தாக்கியுள்ளார். பலர் அந்த வழியாக போய்வந்துகொண்டிருந்தாலும் யாரும் சிறுமி சாக்‌ஷியைக் காப்பாற்ற முன்வரவில்லை. கத்தியால் குத்திக்கொண்டே இருந்த ஷாஹில் கானை ஒரே ஒரு நபர் மட்டும் தடுக்க முன்வருவதையும், அவரும் ஷாஹில் கானின் மிரட்டலுக்கு அஞ்சி விலகுவதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன்.

அப்போது ஒரு நாய் சாக்‌ஷியை நெருங்குவதைக் காணமுடிகிறது. ஆனால், யாரும் வெறிபிடித்த சாஹில் கானைப் பிடித்து தடுத்து நிறுத்த முயலவில்லை. ஒரு நிமிட நேரம் நின்று சாக்‌ஷி இறந்துவிட்டதை உறுதி செய்துகொண்டு ஷாஹில் கான் சம்பவ இடத்திலிருந்து விலகிச் செல்கிறார். சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு போலீசார் வந்து சாக்‌ஷியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகச் சொல்லிவிட்டனர்.

கொலைக்குப் பிறகு கான் நகரத்தை விட்டு வெளியேறி தனது சொந்த ஊரான புலந்த்சஹருக்குச் சென்றுவிட்டார். அவரது தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது சாஹில் கான் தனது அத்தையின் தொலைபேசியைப் பயன்படுத்தி, தனது தந்தைக்குப் போன் செய்தார். அதை வைத்து சாஹில் இருக்கும் இடத்தை அறிந்த போலீசார் புலந்த்சஹருக்கு விரைந்து திங்கள்கிழமை பிற்பகல் அவரைக் கைது செய்தனர்.

Delhi Murder: நாட்டையை உலுக்கிய டெல்லியின் 10 கொடூர கொலை வழக்குகள்

Delhi murder: Killer Sahil Khan lay in wait for Sakshi; she was taken to hospital 30 minutes later by cops

இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு எந்த பிசிஆர் அழைப்பும் வரவில்லை என்று போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனால் உள்ளூர்வாசி ஒருவர் அப்பகுதியில் உள்ள கான்ஸ்டபிளுக்கு இரவு 9:15 மணியளவில் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார் என்றும் அதன் பிறகு போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்தை அடைந்தனர் என்றும் சொல்கின்றனர்.

டெல்லியில் கானின் வீட்டு உரிமையாளர் ராம்பூல் சிங் கூறுகையில், "ஷாஹிலின் தந்தை சர்ஃபராஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்திற்கு குடியிருக்க வந்தார். அவர் தனது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மகன் கானுடன் தங்கி இருந்தார். ரூ.3,500 வாடகை கொடுத்து வந்தனர்" என்று சொல்கிறார்.

கான் பெரும்பாலும் அமைதியாக இருப்பார், அதிகம் பேருடன் பழகுவது இல்லை என்று அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். "யாராவது மதத்தை வைத்து கேலி செய்தால் அவர் கோபப்படுவார். ஆனால் அவர் பெரிய சண்டை எதிலும் ஈடுபட்டதில்லை" என பக்கத்து வீட்டுக்காரர் கூறுகிறார். கானின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பெரும்பாலான படங்கள் மற்றும் வீடியோக்களில் அவர் தனது நண்பர்களுடன் "ஹூக்கா" புகைத்துக் கொண்டிருக்கும் தோற்றத்தில் இருக்கிறார். ஷாகிலுடன் சமீபத்தில் ரிஷிகேஷ், ஹரித்வார் மற்றும் வைஷ்ணோ தேவிக்கு சென்றுவந்ததாகக் கூறிய நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

ஸ்வீடனை அலறவிடும் ரஷ்யாவின் உளவாளி திமிங்கலம்! 4 ஆண்டுகளுக்குப் பின் திரும்ப வந்ததால் பீதி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios