திருச்சியில் சுகாதாரமற்ற முறையில் எண்ணெய் தயாரிப்பு; 4500 லிட்டர் எண்ணெய் பறிமுதல்

திருச்சியில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த இரண்டு சமையல் எண்ணெய் நிறுவனங்களில் இருந்து 4500 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்த அதிகாரிகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளனர்.

4500 litres of cooking oil seized by food safety officer in trichy

திருச்சி மேலப்புலிவார் ரோட்டில் செயல்பட்டு வரும் இரண்டு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் சமையல் எண்ணெயை தயாரித்து விற்பனை செய்து வந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தலைமையிலான குழு ஆய்வு செய்து கால அவகாசமும், எச்சரிக்கையும் தெரிவித்திருந்தது.

மேலும் இந்த நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக பொய்யான ஆவணங்களை பதிவு செய்து உரிமம் பெற்று இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் நேற்று குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது மிகவும் சுகாதாரமற்ற முறையில் தயாரிப்பு இடங்களில் அசுத்தங்கள், மண் கழிவுகள், எலி மற்றும் கரப்பான் பூச்சி வந்து செல்லும் வகையில் இருந்தது. 

“ஆத்தா மகமாயி” சிஎஸ்கே வெற்றிக்காக கடைசி நிமிடம் வரை கடவுளிடம் போராடிய ரசிகர்

இதனை அடுத்து நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு 4 ஆயிரத்து 500 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. உற்பத்தி மற்றும் விற்பனை செய்யக்கூடாது என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் மரச்செக்கு  எண்ணெய் என்று வித விதமாக விளம்பரம் செய்துகொண்டு எண்ணெய் விற்பனை செய்து வரும் பல நிறுவனங்கள் இது போன்று தான் சுகாதாரமற்ற முறையில் தயாரிப்பு இடத்தை வைத்திருக்கின்றனர் என்பது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

கோவை வால்பாறை அருகே காதலி கண் முன்பு நீர்வீழ்ச்சியில் குதித்த காதலன் மாயம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios