தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் கோடை காலம் தொடங்கி உள்ளதால் இரண்டு மாதங்களுக்கு பராமரிப்புக்கான மின்தடை நிறுத்தி வைக்கப்பட்டுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படுகிறது. மின்தடை தொடர்பான தகவல் நாளிதழ் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க;- திடீரென அதிகரிக்கும் கொரோனா.. ரொம்ப எச்சரிக்கையா இருங்க.. அமைச்சர் மா.சுப்ரமணியன் அலர்ட்..!

இந்நிலையில், 11ம், 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கி உள்ளதால் மின்சாதன பராமரிப்புக்கான மின் தடையை இரண்டு மாதங்களுக்கு மின்வாரியம் நிறுத்தியுள்ளது. மிகவும் அவசியம் என்றால் மட்டும் உயரதிகாரிகளிடம் உரிய முன் அனுமதி பெற்று விடுமுறை நாட்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- BREAKING : ஷாக்கிங் நியூஸ்.. இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் இளைஞர் உயிரிழப்பு..!
