திடீரென அதிகரிக்கும் கொரோனா.. ரொம்ப எச்சரிக்கையா இருங்க.. அமைச்சர் மா.சுப்ரமணியன் அலர்ட்..!
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கோவாவுக்கு சென்று விட்டு திருச்சி திரும்பிய 27 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது.
தமிழ்நாடு அரசு நடத்திய சிறப்பு முகாம்கள் மூலம் 2000 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும். அரசியல் நிகழ்ச்சிகள், சமுதாய நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
இதையும் படிங்க;- BREAKING : ஷாக்கிங் நியூஸ்.. இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் இளைஞர் உயிரிழப்பு..!
தமிழ்நாடு அரசு நடத்திய சிறப்பு முகாம்கள் மூலம் 2000 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே வீடுகளிலேயே தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கோவாவுக்கு சென்று விட்டு திருச்சி திரும்பிய 27 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது.
இதையும் படிங்க;- பிறப்பு உறுப்பில் உடைந்த ஊசி... தனியார் மருத்துவமனையின் கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம்!
இளைஞர் H3N2 வைரஸால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் இணை நோய் இருந்ததா? என்பது தொடர்பாக ஆய்வு செய்ய அவரது மாதிரிகளை அனுப்பி வைத்துள்ளோம். பரிசோதனை முடிவுக்கு பிறகு இளைஞர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.