BREAKING : ஷாக்கிங் நியூஸ்.. இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் இளைஞர் உயிரிழப்பு..!
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா, ஒமிக்ரான் கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் தற்போது பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் தற்போது இன்புளுயன்சா வைரஸ் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா, ஒமிக்ரான் கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் தற்போது பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் தற்போது இன்புளுயன்சா வைரஸ் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுத் தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போதுது, இன்புளுயன்சா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மாநில அரசுகள் இதனை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மருத்துவமனைகளில் போதிய மருந்துகள், மருத்துவ பொருள்கள் கையிருப்பு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், பெங்களூருவில் பணியாற்றி வந்த திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் கோவாவுக்கு சுற்றுலா சென்று விட்டு கடந்த 9-ம் தேதி ஊர் திரும்பியுள்ளார். பின்னர், அவருக்கு மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்துது, இளைஞருடன் கோவா சென்ற 4 பேர் மற்றும் அவரது குடும்பத்தினரை தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பிப்ரவரி மாத நிலவரப்படி 545 பேருக்கு இன்ஃபுளுயன்சா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தயாவில் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் கர்நாடகா மற்றும் அரியானாவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.