தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. பாடவாரியாக தேர்ச்சி விகிதம் என்ன? தேர்வில் அசத்திய டாப் 5 மாவட்டங்கள் என்னென்ன? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

Tamil Nadu Plus 1 Exam Result: தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 5ம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்கி மார்ச் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 8,23,261 பேர் எழுதினார்கள். இந்நிலையில், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.

பிளஸ் 1 தேர்வு ரிசல்ட்

பிளஸ் 1 தேர்வில், 4,03,949 மாணவியரும், 3,39,283 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 மாணவர்களைவிட 6.43% மாணவியர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 மாணவியர் 95.13% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை பொறுத்தவரை 88.70% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 தேர்வு மதிப்பெண்களை இன்று பிற்பகல் 2 மணி முதல் மாணவர்கள் அறியலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 1 தேர்வில் முழு மதிபெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை பாடவாரியாக:

தமிழ் - 41

ஆங்கிலம் - 39

இயற்பியல் - 390

வேதியியல் - 593

உயிரியல் - 91

கணிதம் - 1,338

தாவரவியல் - 4

விலங்கியல் - 2

கணினி அறிவியல் - 3,535

வரலாறு - 35

வணிகவியல் - 806

கணக்குப் பதிவியல் - 111

பிளஸ் 1 தேர்வில் முழு மதிபெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை பாடவாரியாக:

தமிழ் - 41

ஆங்கிலம் - 39

இயற்பியல் - 390

வேதியியல் - 593

உயிரியல் - 91

கணிதம் - 1,338

பிளஸ் 1 தேர்ச்சி விகிதம் முதல் 5 மாவட்டங்கள்:‍

அரியலூர் - 97.76%

ஈரோடு - 96.97%

விருதுநகர் - 96.23%

கோவை - 95.77%

தூத்துக்குடி - 95.07%