MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • TN SET EXAM ரிசல்ட் எப்போது வரும்? மெயில் மேல் மெயில்: தேர்வர்கள் Rocked, டி.ஆர்.பி Shocked

TN SET EXAM ரிசல்ட் எப்போது வரும்? மெயில் மேல் மெயில்: தேர்வர்கள் Rocked, டி.ஆர்.பி Shocked

தேர்வு முடிவுகள் தாமதமாவதால் விரக்தியடைந்த தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தேர்வர்கள் மெயில் அனுப்பியுள்ளதால் டி.ஆர்.பி ஷாக்கில் உள்ளதாம்

2 Min read
Author : Suresh Manthiram
Published : May 12 2025, 11:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு
Image Credit : Asianet News

தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு

தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்குத் தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுக்கும் தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு (TNSET) 2025 முடிவுகளுக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் 6 முதல் 9 ஆம் தேதி வரை இந்தத் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
மன உளைச்சலில் தேர்வர்கள்
Image Credit : freepik

மன உளைச்சலில் தேர்வர்கள்

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, டிஎன்செட் 2025 தேர்வு முடிவுகள், கட் ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் தனிநபர் மதிப்பெண் அட்டைகள் ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மே மாதம் பிறந்துவிட்ட நிலையிலும் முடிவுகள் வெளியாகாததால் தேர்வர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களைப் பெற இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம்.

38
டிஎன்செட் தேர்வு முடிவு எப்போது? ஆசிரியர் தேர்வு வாரியம் என்ன சொல்கிறது?
Image Credit : Freepik

டிஎன்செட் தேர்வு முடிவு எப்போது? ஆசிரியர் தேர்வு வாரியம் என்ன சொல்கிறது?

"தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு (TNSET) 2025-க்கான முடிவுகள் எப்போது வெளியிடப்படும்" என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "டி.என்.செட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது" என்று பதிலளித்துள்ளனர். ஆனால், உறுதியான தேதியை அவர்கள் தெரிவிக்கவில்லை.

48
மெயில் மேல் மெயில் அனுப்பும் தேர்வர்கள்!
Image Credit : Freepik

மெயில் மேல் மெயில் அனுப்பும் தேர்வர்கள்!

தேர்வு முடிவுகள் தாமதமாவதால் விரக்தியடைந்த தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

58
வாட்ஸ்அப் குழுக்களில் பரவி வரும் ஒரு மின்னஞ்சல் இதோ:
Image Credit : freepik

வாட்ஸ்அப் குழுக்களில் பரவி வரும் ஒரு மின்னஞ்சல் இதோ:

Subject: Request to Release TNSET 2024 Results or Provide an Official Update Regarding the Delay

To: trbgrievances@tn.gov.in

மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,

நான் முழு அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையுடன் TNSET 2024 தேர்வுக்கு எழுதிய மாணவன்/மாணவி. தேர்வு நடத்தப்பட்டு நீண்ட நாட்களாகியும், விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டும் இதுவரை முடிவுகள் குறித்து எந்த தகவலும் இல்லை.

இந்த நீண்ட தாமதம் எங்களை குழப்பத்திலும், கவலையிலும், மன அழுத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது. மாணவர்கள் மட்டுமல்ல, கல்லூரிகளும் இந்த முடிவுகளை அடிப்படையாக வைத்துதான் தங்கள் ஆட்சேர்ப்பு மற்றும் கல்வித் திட்டமிடலை மேற்கொள்ள காத்திருக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லாததால், நாங்கள் இருளில் தவிக்கிறோம்.

68
வாட்ஸ்அப் குழுக்களில் பரவி வரும் ஒரு மின்னஞ்சல் இதோ:2
Image Credit : freepik

வாட்ஸ்அப் குழுக்களில் பரவி வரும் ஒரு மின்னஞ்சல் இதோ:2

ஆகவே, தயவுசெய்து தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்:

* TNSET 2024 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும்

* அல்லது முடிவு அறிவிப்பு தாமதத்திற்கான காரணம் மற்றும் எதிர்பார்க்கப்படும் தேதி குறித்த பொது அறிவிப்பையாவது வெளியிட வேண்டும்.

நாங்கள் நியாயமற்ற எதையும் கேட்கவில்லை - தெளிவு மற்றும் வெளிப்படைத்தன்மையை மட்டுமே விரும்புகிறோம். எங்கள் எதிர்கால மற்றும் தொழில் திட்டங்கள் நிலுவையில் உள்ளன, மேலும் அதிகாரிகள் எங்கள் நிலையைப் புரிந்துகொண்டு விரைவில் பதிலளிப்பார்கள் என்று நம்புகிறோம்.

இன்னும் இந்த அமைப்பை நம்பும் ஒரு மாணவனின்/மாணவியின் உண்மையான வேண்டுகோளாக இதை கருத்தில் கொள்ளவும்.

நன்றி,

உண்மையுள்ள,

[உங்கள் முழு பெயர்]

[TNSET பதிவு எண் - விருப்பத்திற்குரியது]

[நகரம்/மாவட்டம்]

ஒரு TNSET தேர்வர்"

78
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஷாக்
Image Credit : our own

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஷாக்

இதுபோன்ற மின்னஞ்சல்களை ஆயிரத்திற்கு மேற்பட்ட தேர்வர்கள் அனுப்பியுள்ளதால் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஷாக்கில் உள்ளதாம்

88
காத்திருப்போம்
Image Credit : our own

காத்திருப்போம்

இந்த மின்னஞ்சல் மூலம் தேர்வர்களின் மனக்குமுறலை நாம் உணர முடிகிறது. விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் டிஎன்செட் 2025 தேர்வு முடிவுகளை வெளியிட்டு, உதவி பேராசிரியர் கனவுகளுடன் காத்திருக்கும் தேர்வர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கும் என்று நம்புவோம். தொடர்ந்து புதிய தகவல்களுக்காக காத்திருப்போம்!

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
கல்வி
தொழில்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPSC: அரசுப் போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்! இனி 5 வயது அதிகமானாலும் தேர்வு எழுதலாம்!
Recommended image2
8th Pay Commission: 3 மாசத்துக்கு ஒருமுறை DA உயருமா? 8-வது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கைகள்
Recommended image3
Tamil Nadu Government Jobs: தமிழக அரசு அதிரடி.! 8,000 பேருக்கு அரசு வேலை? எப்போ ஆட்கள் தேர்வு? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Related Stories
Recommended image1
உதவி பேராசிரியர் கனவா? டிஎன் செட் தேர்வுக்கு இப்படி தயாராகுங்கள்!
Recommended image2
Exam Preparation Tips: முதல் முயற்சியிலேயே UGC NET தேர்வில் வெல்ல 10 எளிய வழிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved