சென்னையில் ஓடும் பேருந்தில் கால்களை தரையில் தேய்த்து கொண்டு ஸ்கேட்டிங்! பள்ளி மாணவர் கைது.. சிறையில் அடைப்பு.!

சென்னை மாநகரப் பேருந்தில் 11ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவன் தொங்கியபடி ஆபத்தான முறையில் சாகசம் செய்தது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

Skating on a running bus.. Government school students Arrest

சென்னை மாநகரப் பேருந்தில் 11ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவன் தொங்கியபடி ஆபத்தான முறையில் சாகசம் செய்தது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச பேருந்து அட்டையை பயன்படுத்திய பெரும்பாலும் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு பேருந்தில் பயணம் செய்யும்போது மாணவர்கள் பலர் அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதை தட்டிக்கேட்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை தாக்குவது,  பேருந்தில் படியில் தொங்கிக் கொண்டு சென்ற பள்ளி மாணவர்கள் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடையும் செய்திகளும், சிசிடிவி காட்சிகளும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க;- ஸ்கூல் யூனிபார்மில் மரத்தடியில் கஞ்சா அடிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்.. வெளியான வீடியோவால் பரபரப்பு..!

Skating on a running bus.. Government school students Arrest

இந்நிலையில், சென்னையில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் அபாயகரமாக பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், சென்னை தியாகராயநகரில் இருந்து செம்மஞ்சேரி வரை செல்லும் 19A பேருந்தில் பள்ளி சீருடையில் அரசு பள்ளி மாணவன் ஒருவன் ஓடும் பேருந்தில் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கிக் கொண்டே கால்களை தரையில் தேய்த்து ஸ்கேட்டிங் செய்வது போல சாகசம் செய்தார். இதற்கு பல்வேறு தரப்பில் அந்த மாணவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

Skating on a running bus.. Government school students Arrest

இந்நிலையில், சென்னை மாநகரப் பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான முறையில் சாகசம் செய்த 11ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க;-  வெளிநாடு சென்ற கணவன்! சைடு கேப்பில் மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்க முயன்ற கொடூர தாய்! வெளியான பகீர் சம்பவம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios