வெளிநாடு சென்ற கணவன்! சைடு கேப்பில் மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்க முயன்ற கொடூர தாய்! வெளியான பகீர் சம்பவம்
12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரையும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயாரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரையும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயாரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (33). இவர் மாந்திரீகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிகிச்சை அளித்தும் குணமாகாதால், இது மாந்திரீக குறைபாடு என அக்கம் பக்கத்தினர் கூறினர். இதையடுத்து மந்திரவாதி சிவக்குமார் (38) என்பவரின் அந்த பெண்ணுக்கு கிடைத்தது.
இதையும் படிங்க;- ஸ்கூல்ல சேர்ந்து மூன்று நாள் தான் ஆகுது.. அதுக்குள்ள கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் சீண்டல்.! ஆசிரியர் கைது
இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் தனிமையில் இருக்கும் போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் சிவக்குமாருக்கு வசதியாக போனது. அடிக்கடி அந்தப்பெண் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது, அங்கு சென்ற சிவக்குமார் போதையில் வீட்டில் இருந்த பெண்ணின் 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிளஸ் 2 மாணவி தனது தயாரிடம் கூறியுள்ளார். ஆனால், இதனை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து வெளிநாட்டில் இருக்கும் தனது தந்தைக்கு மாணவி செல்போன் மூலம் பேசி சம்பவம் பற்றி தெரிவித்தார். தொடர்ந்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாணவியின் தாயாரும், சிவக்குமாரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க;- சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி ஆசைத்தீர பலமுறை பலாத்காரம்.. கர்ப்பமாக்கிய உறவினர் போக்சோவில் கைது.!