அரசு உத்தரவை மீறி பள்ளிகள், வணிக வளாகங்கள் திறந்தால் நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையத்திற்கு வருபவர்கள் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமானத்தில் வந்த 1,80,062 பயணிகளுக்கு விமானத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதில் நேற்று வரை 2221 பயணிகள் வீடுகளின் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் மருத்துவக் கண்காணிப்பு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 96 பேரிடம் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 75 பேருக்கு பாதிப்பில்லை என தெரியவந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வரும் 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், நீச்சல்குளம், ஜிம் முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவற்றை வரும் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைப்போன்று விளையாட்டு அரங்குகள் கிளப்புகள், டாஸ்மாக் பார்கள், கேளிக்கை விடுதிகள், சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் வரும் 31-ம் தேதி வரை மூட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உத்தரவுகளை மீறி பள்ளி கல்லூரிகள் வணிக வளாகங்கள் திரையரங்குகள் உள்ளிட்ட அரசு மூட வேண்டும் என்று அறிவித்துள்ள இடங்களை திறந்து வைத்தால் நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும் ஜெயபிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.