கடலோர காவல்படை அதிகாரி திடீர் மாரடைப்பால் மரணம்; ராஜ்நாத் சிங், ஸ்டாலின் நேரில் அஞ்சலி
மாரடைப்பால் உயிரிழந்த இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குநர் ராகேஷ் பாலின் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா நினைவு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். நினைவு நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனை பெற்றுக் கொண்டார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியீடு; தொண்டர்கள் உற்சாகம்
முன்னதாக சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன இந்திய கடலோரக் காவல் படையின் கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையக் கட்டிடத்தினை அமைச்சர் ராஜ்நா் சிங் திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்கவிருந்த இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குநர் ராகேஷ் பாலுக்கு ஞாயிற்றுக் கிழமை காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
கருணாநிதி விளிம்பு நிலை மக்களுக்காக போராடியவர் - ராஜ்நாத் சிங் புகழாரம்
இதனைத் தொடர்ந்து உடனடியாக ராஜீவ்காந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி ஞாயிற்றுக் கிழமை மாலை அவர் திடீரென உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவை முடித்துக் கொண்ட ராஜ்நாத் சிங் கடலோர காவல் படை அதிகாரி ராகேஷ் பாலின் உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் சென்றிருந்தார்.