Asianet News TamilAsianet News Tamil

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியீடு; தொண்டர்கள் உற்சாகம்

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவம் பொறித்த நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் இன்று வெளியிட்டார்.

Minister Rajnath Singh today released the commemorative centenary coin of former Chief Minister Karunanidhi vel
Author
First Published Aug 18, 2024, 7:58 PM IST | Last Updated Aug 18, 2024, 7:58 PM IST

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவம் பொறித்த நினைவு நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முன்னதாக விழா மேடைக்கு வந்த அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து கருணாநிதி தொடர்பான சிறப்பு காணொலி திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதியின் உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios