கருணாநிதி விளிம்பு நிலை மக்களுக்காக போராடியவர் - ராஜ்நாத் சிங் புகழாரம்
தமிழகத்தில் விளிம்பு நிலை மக்களுக்காக போராடியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் இன்று வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ராஜ்நாத் சிங் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நின்று கை தட்டுமாறு அறிவுறுத்தினார். இதனை ஏற்று அனைவரும் எழுந்து நின்று கை தட்டி கருணாநிதிக்கு மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியீடு; தொண்டர்கள் உற்சாகம்
இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், பஞ்சாப் முதல் தமிழ் நாடு வரை அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த போது தலைவராக உருவெடுத்தவர் கருணாநிதி. 1960 முதல் தற்போது வரை திமுக.வை ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக வளர்த்தது அவர் தான். கருணாநிதியின் அரசியல் போராட்டங்கள் மிகவும் தீவிரமாகவும், துணிச்சல் மிக்கவையாகவும் இருந்தன. மேலும் பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவை காத்து வந்தவர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீர் மாற்றம்! அடுத்து வருபவர் யார்?
விளிம்பு நிலை மக்கள் தரமான கல்வியை பெற திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர். மக்கள் குறைகளை கேட்டறிவதற்காக மனுநீதி என்ற திட்டத்தை செயல்படுதியவர். 1989ம் ஆண்டில் மகளுக்கான சுய உதவி குழுக்களைக் கொண்டு வந்தவர். தனது ஆட்சி காலத்தில் மாநில உரிமைகளுக்காகப் போராடியவர். தொடர்ந்து கூட்டாட்சி தத்துவத்திற்காக ஆணித்தனமாக குரல் கொடுத்து வந்தார். மாநில எல்லைகளைக் கடந்து வேற்றுமைகளில் ஒற்றுமையை பேணி காத்தவர்” என புகழாரம் சூட்டினார்.