Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீர் மாற்றம்! அடுத்து வருபவர் யார்?

சிவ்தாஸ் மீனா தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த தலைமைச் செயலாளர் யார் என விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chief Secretary Shivdas Meena sudden change! Who will come next? sgb
Author
First Published Aug 18, 2024, 9:57 PM IST | Last Updated Aug 18, 2024, 9:58 PM IST

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்டுள்ளார். அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைமைச் செயலாளர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக அரசு ஆட்சி அமைத்தது முதல் தலைமைச் செயலாளராக இருந்த வெ. இறையன்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து 49வது தலைமைச் செயலாளராக ஜூலை 1ஆம் தேதி சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றுக் கொண்டார்.

இப்போது சிவ்தாஸ் மீனா தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த தலைமைச் செயலாளர் யார் என விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனக்கு 3 ஆப்ஷன் இருக்கு... புதிர் போடும் சம்பாய் சோரன்... பாஜகவில் இணைவது எப்போது?

சிவ்தாஸ் மீனா ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1989ஆம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவர் என்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்கிறார். முதலில் காஞ்சிபுரம் மாவட்ட துணை கலெக்டராக இருந்தார். பின் கோவில்பட்டி துணை கலெக்டராக இருந்தார்.

வேலூர் மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராகவும் பின் முழுநேர கலெக்டராகவும் பொறுப்பு வகித்தார். தமிழக ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை எனப் பல துறைகளிலும் முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்தவர்.

வாட்ஸ்அப்பில் வதவதன்னு வந்து குவியும் ஸ்பேம் மெசேஜ்... முற்றுப்புள்ளி வைக்கும் புதிய அப்டேட்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios