எனக்கு 3 ஆப்ஷன் இருக்கு... புதிர் போடும் சம்பாய் சோரன்... பாஜகவில் இணைவது எப்போது?
தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பதாக சம்பாய் சோரன் கூறியுள்ளார். இருப்பினும், அவர் டெல்லியில் மேற்கு வங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உள்பட சில பாஜக தலைவர்களைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த மாதம் ஹேமந்த் சோரன் சிறையிலிருந்து வெளியே வந்ததும் ஜார்க்கண்ட் முதல்வர் பதவியில் இருந்து விலகிய சம்பாய் சோரன், பாஜகவுக்கு மாறவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் தனக்கு 3 வாய்ப்புகள் இருப்பதாக எக்ஸ் தள பதிவில் கூறியிருக்கிறார்.
எக்ஸ் தளத்தில் சம்பாய் சோரன் வெளியிட்டுள்ள ஒரு நீண்ட பதிவில், தன் முன்னால் மூன்று வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். “இன்று முதல் என் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப் போகிறது” என்று கனத்த இதயத்துடன் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.
"அரசியலில் இருந்து விலகுவது, சொந்த அமைப்பை உருவாக்குவது, மூன்றாவதாக, என் பாதையில் ஒரு துணை கிடைத்தால், இணைந்து பயணிப்பது. வரவிருக்கும் ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் வரை எனக்கு எல்லா வாய்ப்புகளும் திறந்திருக்கும்" என சம்பாய் சோரன் கூறியுள்ளார்.
கூகுள் பே மூலம் கடன் பெறுவது எப்படி? அப்ளை செய்த உடனே அக்கவுண்டுக்கு வந்துரும்!
67 வயதான சம்பாய் சோரன், ஹேமந்த் சோரன் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக பிப்ரவரி 2ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வந்ததை அடுத்து, ஜூலை 3ஆம் தேதி பதவி விலகினார். ஹேமந்த் சோரன், மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.
கட்சி தன்னை நடத்திய விதம் குறித்து வருத்தம் தெரிவித்திருந்த சம்பை சோரன், இன்று அதுகுறித்த விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். இன்று டெல்லி சென்ற சம்பாய் சோரன், தான் பாஜகவில் இணையப்போவதாக எழுந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த பயணம் மேற்கொண்டிருப்பதாக சம்பாய் சோரன் கூறியுள்ளார். இருப்பினும், அவர் டெல்லியில் மேற்கு வங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உள்பட சில பாஜக தலைவர்களைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
அடிச்சுத் தூக்கு! வீலிங் செய்தவர்களின் பைக்கை தூக்கி விசிய பொதுமக்கள்! வைரல் வீடியோ!!