Asianet News TamilAsianet News Tamil

அடிச்சுத் தூக்கு! வீலிங் செய்தவர்களின் பைக்கை தூக்கி விசிய பொதுமக்கள்! வைரல் வீடியோ!!

சம்பவத்தின் வீடியோ வைரலானதை அடுத்து, பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஸ்டண்ட் செய்தவர்கள், ஸ்கூட்டரை தூக்கி எறிந்தவர்கள் உட்பட 36 பேர் மீது பெங்களூரு காவல்துறையில் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Fed Up With Stunt Riders, People Throw 2 Scooters Off Bengaluru Flyover sgb
Author
First Published Aug 18, 2024, 7:35 PM IST | Last Updated Aug 18, 2024, 7:36 PM IST

பெங்களூரு அருகே போக்குவரத்து நெரிசல் மிகுந்த மேம்பாலத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலர் பைக்கில் வீலிங், ஸ்டண்ட் செய்து கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் இரண்டு பைக்குகளை மேம்பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசிவிட்டனர்.

இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 15ஆம் தேதி பெங்களூரு அருகே நெலமங்களா நகரில் உள்ள மேம்பாலத்தில் நடைபெற்றுள்ளது. சிலர் இரு சக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் வீலிங் செய்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

போக்குவரத்து இடையூறாக இருந்ததால், ஆத்திரமடைந்த பயணிகள் இரண்டு பேரின் பைக்குகளை மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள சாலையில் வீசினர். ஆனால் மேம்பாலத்தில் ஸ்டண்ட் செய்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

வாட்ஸ்அப்பில் வதவதன்னு வந்து குவியும் ஸ்பேம் மெசேஜ்... முற்றுப்புள்ளி வைக்கும் புதிய அப்டேட்!!

இந்த சம்பவத்தின் வீடியோ வைரலானதை அடுத்து, பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஸ்டண்ட் செய்தவர்கள், ஸ்கூட்டரை தூக்கி எறிந்தவர்கள் உட்பட 36 பேர் மீது பெங்களூரு காவல்துறையில் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பரபரப்பான மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக பைக் சாகசம் செய்தவர்களின் பைக்கை பொதுமக்களே தூக்கி வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

1,2 இல்ல... 3 டிஸ்பிளே... மூணு விதமா மடிக்கலாம்!! ஹைப் கிளப்பும் ஹவாய் Tri-Fold மொபைல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios