- Home
- இந்தியா
- Indian Railways: ரயிலில் லக்கேஜ் தொலைந்தால் ரயில்வே இழப்பீடு தருமா? இந்த விதி உங்களுக்குத் தெரியுமா?
Indian Railways: ரயிலில் லக்கேஜ் தொலைந்தால் ரயில்வே இழப்பீடு தருமா? இந்த விதி உங்களுக்குத் தெரியுமா?
ரயிலில் உங்கள் பை திருடு போய்விட்டதா? கவலை வேண்டாம். ராஜ்தானி எக்ஸ்பிரஸில் பயணி ஒருவரின் பை திருடப்பட்ட வழக்கில், இந்திய ரயில்வே துறைக்கு ₹80,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த அதிரடி தீர்ப்பு குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
15

Image Credit : Chatgpt
ரயிலில் உங்கள் பை திருடு போய்விட்டதா? கவலை வேண்டாம்
ரயில் பயணத்தின்போது 'உங்கள் உடைமைகளுக்கு நீங்களே பொறுப்பு' என்ற போர்டுகளைப் பார்த்திருப்போம். ஆனால், ரயில்வே ஊழியர்களின் அலட்சியத்தால் உங்கள் பொருட்கள் திருடுபோனால் யார் பொறுப்பு? இதேபோன்ற ஒரு சம்பவம் தான் ராஜ்தானி எக்ஸ்பிரஸில் நடந்தது. 2021 டிசம்பர் 14 அன்று, ஒரு பெண் தன் கணவர் மற்றும் குழந்தையுடன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12423) 3AC கோச்சில் பயணம் செய்தார். பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா (முகல்சராய்) ரயில் நிலையத்தை ரயில் நெருங்கியபோது, அவரது கைப்பையைக் காணவில்லை. அந்தப் பையில் சுமார் 15 கிராம் தங்கத் தாலி, ₹5,000 ரொக்கம் மற்றும் ஒரு SBI பாஸ்புக் இருந்திருக்கிறது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
25
Image Credit : Pixabay
RPF ஊழியர்களுக்கு தகவல்.. ஜீரோ FIR பதிவு
பை காணாமல் போனதை உணர்ந்ததும், பயணிகள் கோச் அட்டெண்டன்டைத் தேடியுள்ளனர். ஆனால் அவர் அப்போது பணியில் இல்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ரயிலில் இருந்த RPF எஸ்கார்ட் மற்றும் TTE-யிடம் விஷயத்தைத் தெரிவித்துள்ளார். டிசம்பர் 16, 2021 அன்று, புது டெல்லி ரயில் நிலையத்தை அடைந்ததும், பாதிக்கப்பட்டவர்கள் அங்கு ஒரு ஜீரோ FIR பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு GRP கான்பூர் சென்ட்ரலுக்கு மாற்றப்பட்டது. FIR பதிவு செய்தும், பலமுறை கோரிக்கை விடுத்தும், திருடுபோன பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர்கள், ரயில்வேயின் சேவை குறைபாடு குறித்து பதான்கோட் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
35
Image Credit : Gemini AI
ரயில்வே வாதத்தை நிராகரித்த நுகர்வோர் ஆணையம்
இந்த வழக்கு விசாரணையின்போது, ரயில்வே துறை விசித்திரமான வாதங்களை முன்வைத்தது. பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா நிலைய மேலாளரிடம் திருட்டு குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என்று ரயில்வே கூறியது. மேலும், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ் திருடுபோனால், உச்ச நீதிமன்றத்தின் பழைய தீர்ப்புகளின்படி ரயில்வேக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும் வாதிட்டது. ஆனால், பயணத்தின்போதே RPF எஸ்கார்ட்டிடம் பயணிகள் தகவல் கொடுத்தது ரயில்வேயின் சொந்தப் பதிவுகளிலேயே உள்ளது என்பதை நுகர்வோர் ஆணையம் கண்டுபிடித்தது. இதன் மூலம் ரயில்வேயின் வாதம் தவறானது என நிரூபிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் பயணம் முடிந்த உடனேயே ஜீரோ FIR பதிவு செய்து, திருடுபோன தங்கத் தாலிக்கான ரசீதுகளையும் சாட்சியாக சமர்ப்பித்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
45
Image Credit : ANI
கோச் அட்டெண்டன்ட் அலட்சியம்.. அபராதம் அதிகரிப்பு
சம்பவம் நடந்த நேரத்தில் கோச் அட்டெண்டன்ட் தனது இருக்கையில் இல்லை என்ற பயணிகளின் குற்றச்சாட்டை ஆணையம் தீவிரமாக எடுத்துக்கொண்டது. கோச் அட்டெண்டன்ட் பணியில் தான் இருந்தார் என்பதை நிரூபிக்க, ரயில்வே துறை எந்தவொரு பணிப் பட்டியல் (Duty Roster) அல்லது பதிவுகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. பாதுகாப்பு விஷயத்தில் ரயில்வே கடுமையாக அலட்சியம் காட்டியதாகவும், தேவையான ஆதாரங்களைக் காட்டத் தவறியதாகவும் நீதிமன்றம் கோபம் தெரிவித்தது. இதன்மூலம், வடக்கு ரயில்வே சேவை குறைபாட்டில் ஈடுபட்டதாக பதான்கோட் மாவட்ட நுகர்வோர் ஆணையம் தெளிவுபடுத்தியது.
55
Image Credit : Gemini
₹80,000 இழப்பீட்டுடன் வட்டி செலுத்தவும் உத்தரவு
ரயில்வே துறையின் அலட்சியத்திற்காக, பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹70,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், மன உளைச்சல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளானதற்காகக் கூடுதலாக ₹10,000 வழங்க வேண்டும் என்றும் கூறியது. வழக்கு பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து இந்தத் தொகையைச் செலுத்தும் வரை ஆண்டுக்கு 6% வட்டியும் வழங்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தியது. தீர்ப்பு நகல் கிடைத்த ஒரு மாதத்திற்குள் இந்த பணத்தைச் செலுத்தவில்லை என்றால், மொத்தத் தொகைக்கும் 12% ஆண்டு வட்டி விதிக்கப்படும் என்றும் ஆணையம் கடுமையாக உத்தரவிட்டது. பொதுவாக, முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ் தொலைந்து போனால் ரயில்வே இழப்பீடு தராது. ஆனால், ரயில்வே ஊழியர்களின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு குறைபாடு நிரூபிக்கப்பட்டால், பயணிகளுக்கு இழப்பீடு கிடைக்கும் என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் தெளிவாகியுள்ளது.
Latest Videos

