பாஜகவில் இணையும் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன்; ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
அதிமுக முன்னாள் எம்பியான மைத்ரேயான் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
அதிமுக சார்பில் எம்பியாக இருந்தவர் மைத்ரேயன். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் அதிக செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரம் தலைதூக்கிய போது முதலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார். அதன் பிறகு ஓ பன்னீர்செல்வம் பக்கம் தாவி அவருக்கு ஆதரவாக இருந்தார். இதன் காரணமாக கடந்த ஆண்டு அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சென்னையில் மாற்றுத் திறனாளி தொண்டருடன் செல்ஃபி எடுத்து பாராட்டிய பிரதமர் மோடி!
இந்த நிலையில், தான் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருந்து வந்த மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. டெல்லிக்கு சென்று பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் அவர் பாஜகாவில் இணையக் கூடும் என்று கூறப்படுகிறது. இன்னும் சற்று நேரத்தில் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்லும் அவர், பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
முதுமலையில் யானைகளுக்கு உணவளித்த பிரதமர் மோடி
கோவையில் வேகமாக பரவும் கொரோனா... அடுத்தடுத்து இருவர் பலியானதால் பரபரப்பு