Chennai Electric Train Accident: சென்னை ராயபுரம் – பீச் ஸ்டேஷன் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரையும், சென்னை சென்ட்ரலிருந்து மூர் மார்க்கெட்-திருவள்ளூர்-அரக்கோணம் வரையும், கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என லட்சகக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விடுமுறை தொடர்பாக மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்! குஷியில் அரசு ஊழியர்கள்!
இந்நிலையில் ஆவடியில் இருந்து பயணிகள் ஏற்றுக்கொண்டு மின்சார ரயில் வந்துக்கொண்டிருந்தது. அப்போது சென்னை ராயபுரம் – பீச் ஸ்டேஷன் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மூன்றாவது பெட்டியில் இரண்டு ஜோடி சக்கரம் தடம் புரண்டதுமே உடனடியாக லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்! இந்த கேள்வியை அட்டென்ட் பண்ணினாலே போதும்!
இந்த விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் சக்கரங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சார ரயில் தடம்புரண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிமரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
