- Home
- Tamil Nadu News
- விடுமுறை தொடர்பாக மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்! குஷியில் அரசு ஊழியர்கள்!
விடுமுறை தொடர்பாக மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்! குஷியில் அரசு ஊழியர்கள்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ஏப்ரல் 24ம் தேதி தொடங்குகிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் மே 12ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Madurai Chithirai Festival
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இக்கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. ஆண்டு தோறும் இந்த விழா வெகுவிமர்சியாக கொண்டாப்பட்டு வருகிறது. மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்களின் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்று சித்திரை திருவிழா. இதில் முக்கிய நிகழ்ச்சிகளாக பார்க்கப்படுவது மீனாட்சிக் திருக்கல்யாணமும், அழகரின் வைகை ஆற்று வைபவமும் தான். அந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள், நாடு முழுவதும் இருந்து வருவது வழக்கம்.
Madurai Chithirai Festival 2025
மதுரை சித்திரை திருவிழா
இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி வியாழன் அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் முக்கிய நிகழ்வுகளாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் மே 6ம் தேதியும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8ம் தேதியும், மீனாட்சி அம்மன் கோவில் திருத்தேரோட்டம் மே 9ம் தேதியும் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க:10ம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்! இந்த கேள்வியை அட்டென்ட் பண்ணினாலே போதும்!
Vaigai River
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் மே 12ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் காண்பதற்காக சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Government Employee
உள்ளூர் விடுமுறை
இந்நிலையில் மக்களின் வசதிக்காக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த இடங்களில் பவர் கட் தெரியுமா?
Bank
வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது
உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act-1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பின்னர் வரக்கூடிய ஒரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.