கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்... மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
மீன்கள் செத்து மிதப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் உடனடியாக தெப்பக்குளம் உள்ள பகுதி முழுவதும் குளோரின் மற்றும் பீளிச்சீங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளன. யாரும் தெப்பக்குளத்தில் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தபட்டுள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் திங்கட்கிழமை திடீரென ஆயிரக் கணக்கான மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கியுள்ளன. குளத்தில் இறந்து மிதக்கும் மீன்களைக் கண்ட கோயில் நிர்வாகம் சார்பில் மீன்வளத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் தெப்பக்குளத்திற்குச் சென்ற மாநகராட்சி பணியாளர்கள் மிதக்கும் மீன்களை அகற்றினர். தொடர்ந்து குளத்தில் உள்ள நீர் நச்சுத்தன்மை அடைத்திருக்கிறதா என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
"காலை 7 மணியளவில், கோயில் நிர்வாகத்தில் இருந்து மீன்கள் செத்து மிதப்பது பற்றி தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சுமார் 25 மாநகராட்சிப் பணியாளர்கள் அங்கு சென்று தெப்பக்குளத்தில் இறந்தது மிதக்கும் மீன்களை அகற்றினர்" என மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
பிறந்த நாளில் தாளில் தாய், தந்தையரை வணங்கி கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர் உதயநிதி
மீன்கள் செத்து மிதப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் உடனடியாக தெப்பக்குளம் உள்ள பகுதி முழுவதும் குளோரின் மற்றும் பீளிச்சீங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளன. யாரும் தெப்பக்குளத்தில் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தபட்டுள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என்றும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கபாலீஸ்வரர் கோயில் தை மாத தெப்ப உற்சவத்துக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், குளத்தில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப்பில் தீடீர்னு காணாமல் போன வசதி திரும்ப வந்துருச்சு... பிரைவசிக்கு இன்னொரு கேரண்டி!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D