வாட்ஸ்அப்பில் தீடீர்னு காணாமல் போன வசதி திரும்ப வந்துருச்சு... பிரைவசிக்கு இன்னொரு கேரண்டி!
வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலிகளில் இருந்து ஒருமுறை மட்டும் பார்க்கக்கூடிய மெசேஜ்களை அனுப்ப முடிகிறது. இந்த ஆப்ஷனை பயன்படுத்தி அனுப்பிய போட்டோ மற்றும் வீடியோக்கள் பெறுநரின் கேலரியில் சேவ் (Save) ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் நீக்கப்பட்ட அம்சம் ஒன்று மீண்டும் கொண்டுவந்துள்ளது. மெசேஜ்களை ஒரு முறை மட்டும் பார்க்க அனுமதிக்கும் ‘View Once’ என்ற அம்சத்தைத்தான் வாட்ஸ்அப் திரும்ப அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் உரையாடலில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை பார்வையிட்ட பிறகு தானாகவே மறைந்துவிடும்.
ஒரு வருடத்திற்கு முன்பு இந்த அம்சம் வாட்ஸ்அப்பில் இருந்து அகற்றப்பட்டது. இந்த அம்சம், இப்போது சில பயனர்களுக்கு மீண்டும் கிடைக்கத் தொடங்கியுள்ளதாகக் என்று கூறப்படுகிறது.
WABetainfo அளிக்கும் தகவலின்படி, டெஸ்க்டாப் செயலிகளில் மட்டும் ஒருமுறை பார்த்த பின் மறையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் வசதி திரும்ப அறிமுகமாகியுள்ளது. அடுத்த சில வாரங்களில், அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விண்டோஸ் லேப்டாப்களுக்கான வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனில் படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பவதற்கு முன் எடிட் செய்யும் டிராயிங் எடிட்டருக்குள் View Once பட்டனும் இருக்கும். அதை பயன்படுத்தி ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய போட்டோ வீடியோ மெசேஜ்களை அனுப்பலாம்.
விண்டோஸுக்கு முன்பே மேக் ஓ.எஸ். (MacOS) லேப்டாப்களிலும் வாய்ஸ் இதே 'View Once' என ஆப்ஷன் திரும்ப வெளியிடப்பட்டது. இதன் மூலம் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலிகளில் இருந்து ஒருமுறை மட்டும் பார்க்கக்கூடிய மெசேஜ்களை அனுப்ப முடிகிறது. இந்த ஆப்ஷனை பயன்படுத்தி அனுப்பிய போட்டோ மற்றும் வீடியோக்கள் பெறுநரின் கேலரியில் சேவ் (Save) ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமிட்றி இந்த ஆப்ஷன் மூலம் அனுப்பப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை ஃபார்வேர்டு செய்யவோ, சேவ் செய்யவோ, ஸ்டார் போடவோ வேறு யாருக்கும் பகிரவோ முடியாது. இந்த வகையான மெசேஜ்களை 14 நாள்களுக்குள் திறந்து பார்க்கவில்லை என்றால் அந்த மெசேஜ் தானாகவே அழிந்துவிடும்.
ஏர்டெல் யூஸ் பண்றீங்களா? நெட்பிளிக்ஸ் உங்களுக்கு ப்ரீ தான்... மிஸ் பண்ணாதீங்க...
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D