Asianet News TamilAsianet News Tamil

தமிழக காவல் துறையில் அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்; பெண் காவலர்கள் நிம்மதி பெருமூச்சு

மகப்பேறு விடுப்புக்கு சென்று மீண்டும் பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு அவர்களது சொந்த ஊரிலேயே பணி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Chief Minister Stalin presented medals to the constables working in the Tamil Nadu Police Department vel
Author
First Published Aug 23, 2024, 11:37 PM IST | Last Updated Aug 24, 2024, 7:25 AM IST

காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள் மற்றும் முதல்வரின் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவப்படுத்தினார்.

உங்களுக்ககெல்லாம் சோறு போட்டது குத்தமா? உரிமையாளர்களின் கதையை முடித்த செல்ல பிராணிகள்

இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு 1 வருடத்திற்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள் அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதில் பல்வேறு சிக்கில்கள் மற்றும் சிரமங்கள் ஏற்படுவாகக் கூறி தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. அதன்படி பெண் காவலர்களின் கோரிக்கையை ஏற்று மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் காவலர்களுக்கு பணி மூப்பிற்கு விலக்கு அளித்து அவர்களின் பெற்றோரோ அல்லது கணவர் வீட்டைச் சார்ந்தவர்களோ வசிக்கும் சொந்த ஊரிலேயே அடத்த 3 ஆண்டுகளுக்கு பணி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

திருத்தணி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த துப்புரவு பணியாளர்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

பெண்கள், குழந்தைகளை பாதிக்கக் கூடிய குற்றச் செயல்களைத் தடுப்பதில் பெண் காவலர்கள் முக்கிய பணியாற்றி வருகின்றனர். பெண் கடத்தல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை விசாரித்து தீர்ப்பதற்கு பெண் காவலர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும். மக்களைக் காப்பாற்றுதல் உங்கள் கடமை. மக்களை பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. அதனை எந்த குறையும் இன்றி நிறைவேற்றித் தரவேண்டும் என்பது எனது கோரிக்கை” என்று பேசினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios