சென்னையில் அதிர்ச்சி.. ஏசியில் மின்கசிவால் தீ விபத்து.. தாய், மகள் உயிரிழப்பு!
சென்னை அம்பத்தூர் அடுத்துள்ள மேனாம்பேடு இந்திரா நகரில் உள்ள வீட்டில் ஏசி ஆன் செய்து விட்டு தாய், மகள் நேற்று இரவு தூக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வயர்களில் தீப்பிடித்ததால் கரும்புகை சூழ்ந்தது.

சென்னையில் ஏசியில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் அடுத்துள்ள மேனாம்பேடு இந்திரா நகரில் உள்ள வீட்டில் ஏசி ஆன் செய்து விட்டு தாய், மகள் நேற்று இரவு தூக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வயர்களில் தீப்பிடித்ததால் கரும்புகை சூழ்ந்தது. இதனால், மூச்சு திணறல் ஏற்பட்டு தாய் ஹாலினா (50) மற்றும் மகள் நஸ்ரியா(16) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க;- ஒரே இரவில் அலறவிட்ட கனமழை.. அரண்டு மிரண்டு போன வாகன ஓட்டிகள்.. ஸ்தம்பித்துபோன சென்னை..!
அப்போது, கரும்புகை வெளியேறுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தப்போது தாய், மகளும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: என்னடா இது வம்பா போச்சு! இன்னைக்குன்னு பார்த்து இவ்வளவு இடங்களில் மின்தடையா?