இந்த மாதிரி SMS வந்தா நம்பாதீங்க.. உங்க வங்கிக்கணக்கு காலியாகலாம்... சென்னை காவல்துறை எச்சரிக்கை..

அதிகரித்து வரும் சைபர் மோசடிகள் குறித்து சென்னை காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

chennai cyber crime police warning about bank account related cyber crimes Rya

கடந்த சில ஆண்டுகளாகவே டிஜிட்டல் பண பரிவர்த்தனை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இண்டர்நெட் பேங்கிங், யுபிஐ, போன்ற டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வது பொதுமக்களின் வேலையை எளிதாக்கி, நேரத்தை மிச்சப்படுத்தினாலும் ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. எனவே வங்கிக்கணக்கு தொடர்பாக எந்த தனிப்பட்ட தகவலையும் யாரிடமும் பகிர வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக சைபர் கிரிமினல்கள் பல்வேறு நூதன வழிகளை பயன்படுத்தி மக்களின் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். வங்கி வாடிக்கையாளர்களை தொலைபேசி மூலம் அழைக்கும் சைபர் குற்றவாளிகள், வங்கி ஊழியர்கள் போல் பேசி ஓடிபி உள்ளிட்ட விவரங்களை கேட்டு பணத்தை மோசடி செய்து வருகின்றனர். எனவே இதுகுறித்து வங்கிகளும், காவல்துறையும் வங்கி தொடர்பான விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர். எனினும் சிலர் சைபர் கிரிமினல்களிடம் சிக்கி தங்கள் பணத்தை இழந்துவிடுகின்றனர்.

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அந்த வகையில் தற்போது சென்னையில் புதிய மோசடி ஒன்று அரங்கேறி உள்ளது. புழல் பகுதியை சேர்ந்த அப்துல் லத்தீஃப் என்ற நபருக்கு செல்போனில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதில் உங்களின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்றும் உடனடியாக வங்கி விவரங்களை நிரப்பினால் மட்டுமே வங்கிக்கணக்கை மீட்டெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வங்கி விவரங்கள நிரப்புவதற்கு ஒரு லிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை உண்மை என்று நம்பிய அப்துல் லத்தீஃப் அந்த லிங்கில் தனது வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்களை பதிவு செய்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.44,000 பணம் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ் வந்துள்ளது.

அதன்பிறகே நூதன முறையில் பண மோசடி நடந்துள்ளது என்பது அப்துல் லத்தீஃப்க்கு தெரியவந்துள்ளது. அதே போல் புழல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் சைபர் கிரிமினல்கள் வங்கி விவரங்களை பதிவு செய்யக்கோரி லிங்க் ஒன்றை அனுப்பி உள்ளனர். அவரும் தனது விவரங்களை பதிவு செய்த நிலையில் அவரின் வங்கிக்கணக்கில் ரூ.10000 பணம் திருடப்பட்டுள்ளது.

Tamilnadu Police: இனிமேல் வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் ஆப்பு தான்.. ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறை..!

புழல் காவல்துறையில் இந்த சைபர் மோசடிகள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை காவல்துறையினர் வழங்கி உள்ளனர். அதாவது செல்வ்போனுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுந்தகவல், லிங்கை கிளிக் செய்யக்கூடாது. இணையதள முகவரி சரியாக இருந்தால் மட்டுமே பதிலளிக்க வேண்டும். இல்லை எனில் வங்கிகளுக்கு நேரில் சென்று தங்களின் சந்தேகங்களை போக்கிக்கொள்ளலாம்.

பொதுமக்கள் ஒருபோது தங்களின் வங்கிக்கணக்கு விவரங்களை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது. உங்கள் ஓடிபி அல்லது தனிப்பட்ட விவரங்களை வங்கி ஊழியர்கள் ஒருபோதும் கேட்க மாட்டார்கள். எனவே ஓடிபி எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் அறிவிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios