சென்னையில் கடந்த நில நாட்களாகவே மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழில்கள் அதிகரித்து வருகிறது. இதை போலீசார் அனுமதியோடு நடந்து வருகிறது என்ற அதிர்ச்சி செய்தியும் தற்போது வெளியாகி உள்ளது. 

சென்னையில் தற்போது 500-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் தொடங்கப்பட்டு பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றன. இதில் மசாஜ் குறித்த எந்த பயிற்சியும் இல்லாத பெண்கள், இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களின் நோக்கம், பணம் பறிப்பதுதான். தற்போது சென்னை விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றும் போலீசார் ஒரு மசாஜ் சென்டருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் பணம் வீதம் வசூலித்து வருவதாகவும், இதனால் தான் தெருவுக்கு தெரு மசாஜ் சென்டர்கள் தொடங்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இதனிடையே சென்னை விபசார தடுப்புப் பிரிவில் பணியாற்றி தற்போது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ள சிறப்பு எஸ்.ஐ ஒருவர் வடபழனி, அண்ணாநகர், திருமங்கலம், நுங்கம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட 7 இடங்களில் ஆட்களை வைத்து அவரே நேரடியாக மசாஜ் சென்டர்களை நடத்தி வருவதாகவும், அங்கு விபசாரமும் சேர்த்து நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் பாலியல் தொழிலுக்காக தொடங்கப்பட்டுள்ள மசாஜ் சென்டர்கள் மீது உடனே கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றி தற்போது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ள சிறப்பு எஸ்.ஐ ஒருவர்  வடபழனி, அண்ணாநகர், திருமங்கலம், நுங்கம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட 7  இடங்களில் ஆட்களை வைத்து அவரே நேரடியாக மசாஜ் சென்டர்களை நடத்தி வருவதாகவும், அங்கு பாலியல் தொழிலும் சேர்த்து நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இங்கு வரும் வாடிக்கையாளர்களில் ஒரு சிலர் மட்டுமே பணம் பறிக்கும் இந்த கும்பலின் டெக்னிக் தெரிந்தவர்கள். மற்ற புதியவர்கள் பெண் ஆசையில் உள்ளே நுழைந்து பணத்தை ஏமாந்து அதை சொல்ல முடியாமல் சிலர் குமுறி வருகின்றனர்.