பெசன்ட் நகர் கடற்கரையில் உலவும் விஷத்தன்மை கொண்ட ப்ளூ டிராகன்கள்!
ப்ளூ டிராகன்கள் சற்று நச்சுத்தன்மை கொண்டவை. குழந்தைகளை இவை கொட்டினால், கடுமையான வலியை ஏற்படுத்தும். கரையோரங்களில் நீச்சல் அடிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
சென்னையில் பெசன்ட் நகர் கடற்கரைக்குச் செல்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! கடற்கரைக்கு அருகில் அழகான தோற்றமுடைய, வண்ணமயமான உயிரினங்கள் மிதப்பதை நீங்கள் காண நேர்ந்தால், அவற்றைத் தொடாதீர்கள். தொட்டால் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும்.
கடந்த இரண்டு நாட்களாக, பெசன்ட் நகரின் கடற்கரையிலும், கரையோர நீர்நிலைகளிலும், ப்ளூ டிராகன்கள் (Glaucus atlanticus) என்ற ஒரு வகை கடல்வாழ் உயிரியைக் காணமுடிகிறது. பொதுவாக கடலின் மேற்பரப்பில் காணப்படும் அவை சில நேரங்களில் புயல் அல்லது கடல் சீற்றம் காரணமாக கரைக்கு வந்துவிடும்.
கடல் உயிரியலாளர்கள் இந்த சிறிய உயிரினங்கள் லேசான விஷத்தன்மை கொண்டவை என்று சொல்கிறார்கள். அவை கொட்டினால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
12/31/23: ஆண்டின் கடைசி நாளில் நிகழும் எண் கணித அதிசயம்! ஒரு நம்பருக்குள்ள இவ்வளவு இருக்கா!
இந்தியாவின் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்த ஸ்ரீவத்சன் ராம்குமார் இந்த அபூர்வ கடல் உயிரினத்தைக் கண்டறிந்து படமெடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை பெசன்ட் நகரில் உடைந்த பாலம் உள்ள பகுதிக்கு அருகில் 50க்கு மேற்பட்ட ப்ளூ டிராகன்களைப் பார்த்ததாக அவர் கூறியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை இறந்து கிடந்த நிலையில், சில மட்டும் உயிருடன் இருந்தன என்றும் அவர் கூறியுள்ளார்.
கடல்வாழ் உயிரினங்கள் மீது ஆர்வம் கொண்ட ஷ்ரவன் கிருஷ்ணனும் அடையாறு முகத்துவாரம் அருகே ப்ளூ டிராகன் கூட்டத்தைக் கண்டிருக்கிறார். திங்கட்கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில் கழிமுகம் அருகே அவற்றைப் பார்த்ததாகச் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ப்ளூ டிராகன்கள் கடற்கரைக்குச் செல்வோருக்கு அச்சுறுத்தலாக இருக்குமா?
ப்ளூ டிராகன்கள் சற்று நச்சுத்தன்மை கொண்டவை. குழந்தைகளை இவை கொட்டினால், கடுமையான வலியை ஏற்படுத்தும். கரையோரங்களில் நீச்சல் அடிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும், பகல்நேர வெப்பத்தை ப்ளூ டிராகன்களால் தாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறானது: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா குற்றச்சாட்டு