Asianet News TamilAsianet News Tamil

12/31/23: ஆண்டின் கடைசி நாளில் நிகழும் எண் கணித அதிசயம்! ஒரு நம்பருக்குள்ள இவ்வளவு இருக்கா!

மேலும், 123 மற்றும் 123123 என்ற எண் வரிசைகள் தேவதை எண்கள் என குறிப்பிடப்படுகின்றன. இவை பிரபஞ்சத்திலிருந்து செய்திகளை தெரிவிப்பதாக நம்பப்படும் சிறப்பு எண் வடிவங்கள் எனக் கருதப்படுகின்றன.

The significance of 12/31/23: Unraveling why the last day of the year holds special meaning for you sgb
Author
First Published Dec 20, 2023, 2:36 PM IST

புத்தாண்டு நாளுக்கு முந்தைய டிசம்பர் 31, 2023 அன்று எண் கணிதத்தில் குறிப்பிட்ட முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. எண் கணித அடிப்படையில் 2023ஆம் ஆண்டின் கடைசி நாளின் அர்த்தம் என்ன என்று தெரிந்துகொள்ளலாம். எண்ணியல் கணிப்புகளின்படி, 12/31/23 என்ற தேதி 123123 என்ற ஒரு தனித்துவமான எண் வரிசையை உருவாக்குகிறது.

இந்த வரிசை ஒரு கவுண்ட்டவுனை நினைவூட்டுகிறது. இது புதிதாகத் ஒன்றைத் தொடங்குவதற்கான எண்ணத்தைத் தூண்டுகிறது. எண் கணிதத்தில், 123 என்ற எண் வரிசை புதிய செயலைத் தொடங்குவதற்கான உந்துதலைக் குறிக்கிறது.

மேலும், 123 மற்றும் 123123 என்ற எண் வரிசைகள் தேவதை எண்கள் என குறிப்பிடப்படுகின்றன. இவை பிரபஞ்சத்திலிருந்து செய்திகளை தெரிவிப்பதாக நம்பப்படும் சிறப்பு எண் வடிவங்கள் எனக் கருதப்படுகின்றன. பொதுவாக, இந்த எண்கள் ரசீதுகள் அல்லது கடிகாரங்கள் போன்ற ஒருவரின் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் தோன்றும். அவற்றின் முக்கியத்துவத்திற்கு கவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தைக் குறிக்கிறது.

இருப்பினும், இந்த வரிசைகள் 4/3/21 அன்று 4321 அல்லது 2/22/22 அன்று 22222 போன்ற குறிப்பிட்ட தேதிகளில், இந்த எண்களின் பொருள் இன்னும் விரிவடையும் என்று கருதப்படுகிறது.

எண் கணிதத்தில் 123 இன் முக்கியத்துவம்?

எண் கணிதத்தில், ஒவ்வொரு எண்ணும் அதன் தனித்துவமான பொருளைக் கொண்டுள்ளன. எண்கள் ஒன்றிணைந்து 123 போன்ற வடிவங்களை உருவாக்கும் போது, ​​ஒட்டுமொத்தமாக அவை கூறும் செய்தியை கருத்தில் கொள்ள வேண்டும். எண் கணித கணிப்புகளின்படி, 123 என்ற வரிசைக்குள் ஒவ்வொரு எண்ணின் முக்கியத்துவம் என்ன என்று பார்க்கலாம்.

எண் 1: புதிய தொடக்கங்களைக் குறிக்கிறது.

எண் 2: உணர்ச்சிகள் மற்றும் நல்ல நேரங்களில் அடையும் இன்பத்தைக் குறிக்கிறது.

எண் 3: கற்றல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது.

ஒரு எண் வரிசையின் பொருளைப் புரிந்துகொள்வதற்கான மற்றொரு அணுகுமுறை, அதன் இலக்கங்களை தனித்தனி ஒற்றை இலக்கங்களாகப் பார்ப்பது. எடுத்துக்காட்டாக, 123 என்ற வரிசையை 1+2+3 எனக் கூட்டினால் 6 வரும். எண் கணிதத்தில், 6 என்பது வளர்ப்பு, சமநிலை மற்றும் அன்பு போன்ற குணங்களுடன் தொடர்புடையது. இதன் விளைவாக, 2023ஆம் ஆண்டின் கடைசி நாளில் 12/31/23 என்ற தேதியில் உள்ள எண்கள் நேர்மறையான பண்புகளைக் குறிக்கின்றன.

12/31/23 தேதி ஏன் மிகவும் சிறப்பு வாய்ந்தது?

புத்தாண்டைக் குறிக்கும் தேதி 12/31/23, தொடர்ச்சியாக இரண்டு முறை 123 என்ற வரிசையைக் கொண்டிருக்கிறது. இது எண் கணிதத்தில் ஒரு தனித்துவமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. எனவே இந்த நாள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, இது முன்னேற்றத்திற்கான வாய்ப்பைக் குறிக்கிறது. ஒற்றுமை மற்றும் கூட்டு முன்னேற்ற உணர்வை வலியுறுத்துகிறது.

தேதிக்குள் தனிப்பட்ட எண்களை ஆராய்வது கூடுதல் அர்த்தத்தை வழங்குகிறது. குறிப்பாக, எண் கணிதத்தில் எண் 12 என்பது ஒருவரின் உண்மையான ஆசைகளுடன் தொடர்புடையது. அதே சமயம் 23 என்பது வலுவான மற்றும் நிலையான ஆற்றல் இருப்பதைக் குறிக்கிறது. இருப்பினும், 31 என்ற எண் இடையூறுகள் அல்லது திட்டங்கள் நினைத்தபடி நடக்காமல் போகலாம் என்று எச்சரிக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios