சென்னையில் 932 வாகனங்கள் பறிமுதல்... புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிமீறயதால் நடவடிக்கை!!
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை முதல் போர் நினைவு சின்னம் வரையிலும், அதேபோல் மெரினா கலங்கரை விளக்கம் வரை நேற்று 7 மணி முதல் வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் மாநகர போலீஸ் தடை விதித்து இருந்தது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் கார் விபத்து: 4 தமிழர்கள் உயிரிழப்பு
அதேபோல், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் வாகனங்களை கண்காணிக்க 25 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: டிகிரி படித்திருந்தால் போதும்.! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அருமையான வேலைவாய்ப்பு
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிகளை மீறியதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் நேற்று மேற்கொண்ட தீவிர வாகன சோதனையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 360 வாகனங்களும், இதர விதிமீறல்களில் ஈடுபட்டதாக 572 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.