அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - தமிழ்நாட்டில் உள்ள தொழில்முறை உதவியாளர் பதவிக்கான ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம்.

TNPSC : போட்டி தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி சொன்ன குட் நியூஸ்.. குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள்

அமைப்பின் பெயர் : அண்ணா பல்கலைக்கழகம்

பணி : தொழில்முறை உதவியாளர்

மொத்த காலியிடங்கள் : 6

சம்பளம் : ரூ. 821/- நாள் ஒன்றுக்கு

வேலை இடம் : சென்னை - தமிழ்நாடு

கல்வித் தகுதி :

அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பப் பொறியியலில் BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : இல்லை.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்காணல்

எவ்வாறு விண்ணப்பிப்பது? :

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் டீன் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், குரோம்பேட்டை, சென்னை 600044 என்ற முகவரிக்கு ஜனவரி 18க்கு அல்லது அதற்கு முன்பு அனுப்ப வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் annauniv.edu மூலம் மேலும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளா..? பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை