TNPSC : போட்டி தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி சொன்ன குட் நியூஸ்.. குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Additional 2500 Posts TNPSC Notification for Group 4 Examination

ஜூலை மாதத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.  விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருவதால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஏற்கனவே 7,301 பணியிடங்கல் இருந்த நிலையில் குருப்-4 தேர்வில் கூடுதலாக சுமார்  2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

மொத்தம் 9,870 பணியிடங்களாக அதிகரித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஜனவரியில் முதலில் அல்லது கடைசியில் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Additional 2500 Posts TNPSC Notification for Group 4 Examination

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளா..? பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை

குரூப் 4 பதவிகள், ஒரே நிலை எழுத்துத் தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதால், எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரோ/ நேர்காணலுக்கு (counselling) அழைக்கப்படுவதற்கு முன்னரோ காலிப் பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்னரே, காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டால், மூலச் சான்றிதழ் மற்றும் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படும் தேர்வர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும். காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், கட் ஆப் மதிப்பெண்கள் குறையத் தொடங்கும்.

எனவே, தற்போது கட்- ஆப் மதிப்பெண்களில் விளிம்பு நிலையில் இருக்கும் தேர்வர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2023 தேர்வு அட்டவணையை பார்த்து அதிர்ச்சியடைந்த தேர்வர்களுக்கு, தற்போது இந்த தகவல் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios