தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

job vacancy in tamilnadu sports development authority and here the deatails how to apply

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி,  ஆலோசகர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

பதவி:

  • ஆலோசகர்

மொத்த காலியிடங்கள்: 

  • ஆலோசகர் Consultant (Sports Performance Management) – 2
  • ஆலோசகர் Consultant (Information Technology) - 1
  • ஆலோசகர் Consultant (Social Media Management) - 1
  • ஆலோசகர் Consultant (Accounts) - 2

இதையும் படிங்க: தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

கல்வித் தகுதி:

  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் CA, ICWA, CA Inter, BE, B.Tech, MBA, PGDM ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

  • இந்தப் பணிகளுக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.60,000  வரை ஊதியம் வழங்கப்படும். 

வயது வரம்பு:

  • 1.12.2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 23 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

இதையும் படிங்க: ஜன.5 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம்... அறிவித்தது ஜாக்டோ ஜியோ!!

விண்ணப்பிப்பது எப்படி?

  • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான www.sdat.tn.gov.in - என்ற முகவரியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
  • வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களும் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 
  • பணியிடங்களுக்கு நேரடி நியமன தேர்வு நடைபெறுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை:

  • www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
  • விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சுய விவரங்களை பூர்த்தி செய்து, அதோடு தேவையான கல்வி உள்ளிட்ட ஆவணங்களை அப்லோடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி:

  • 30.12.2022
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios