சென்னையில் வயதான தம்பதியரை கட்டிப்போட்டு 75 சவரன் நகை, 3 லட்சம் ரொக்கம் கொள்ளை - 10 தனிப்படை அமைத்து விசாரணை
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வயதான தம்பதியை கட்டிப்போட்டு 75 சவரன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை காவல் துறையினர் 10 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதி, முதல் பிரதான சாலையைச் சேர்ந்தவர் சோழன். இவர் கட்டுமான பணி செய்து வருவதாக தெரிகிறது. வீட்டின் கீழ் தளத்தில் சோழன் மற்றும் அவரது மனைவி இருவரும் நேற்று இரவு வழக்கம் போல உணவு அருந்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணி அளவில் சோழனின் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு சோழன் வெளியே சென்று கதவை திறந்து உள்ளார்.
அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சோழனின் வீட்டின் உள்ளே புகுந்து சோழன் மற்றும் சோழனின் மனைவி கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி அவர்களை ஓரிடத்தில் அமர வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஐந்து பேர் கொண்ட கும்பலில் மூன்று பேர் சோழன் வீட்டு பீரோவை திறந்து வீட்டின் பீரோவில் இருந்த 75 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் மூன்று லட்சத்தை ஒரு பையில் போட்டுக் கொண்டு சோழன் மற்றும் அவருடைய மனைவியை வாய் மற்றும் கைகளை ஒரு துணியால் கட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
மூக்கு உடைபட்டாலும் மருந்து போட்டுக்கொண்டு கோவை தொகுதியில் போட்டியிடுவேன் - கமல்ஹாசன்
இதனை அடுத்து சோழன் மெதுவாக அவரது மனைவி உதவியுடன் கையில் கட்டப்பட்டிருந்த கட்டை அவிழ்த்துள்ளார். பிறகு அவருடைய மனைவி வாய் மற்றும் கையில் கட்டப்பட்டிருந்த கட்டினை சோழன் அவிழ்த்து எரிந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம் திரு நகரில் வசித்து வரும் தனது மகளிடம் நடந்த சம்பவத்தை பற்றி கூறி வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதை அடுத்து சோழனின் வீட்டிற்கு விரைந்த அவரது மகள் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து இது குறித்து சென்னை வில்லிவாக்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சென்னை கொளத்தூர் துணை ஆணையாளர் சக்திவேல் தலைமையிலான காவல் துறையினர் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப் படைகளை அமைத்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வயதான தம்பதியர்களை கட்டிப்போட்டு விட்டு கத்தி முனையில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தற்போது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.