Asianet News TamilAsianet News Tamil

திமுகவின் அடிமைகளாக செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிமுகவை விமர்சிக்க தகுதி இல்லை - அன்பழகன் ஆவேசம்

திமுவின் அடிமைகளாக செயல்பட்டு வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிமுகவை விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது என புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார். 

communist parties had not any rights to criticize aiadmk says puducherry secretary anbazhagan vel
Author
First Published Sep 22, 2023, 3:00 PM IST | Last Updated Sep 22, 2023, 3:00 PM IST

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியை அதிமுக தொடர்ந்து செய்து வருகிறது. அப்படி இருக்கும் போது அதிமுகவை விமர்சிக்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை.

தமிழகத்தில் கஞ்சா விற்பனை, ஆட்சியாளர்கள் ஊழல் முறைகேடு, வன்கொடுமைகள், என தமிழகத்தில் தினந்தோறும் மக்கள் விரோத செயல் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த தவறுகளை சுட்டிக்காட்டி வாய் திறக்க துப்பற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. முதலமைச்சர் ஸ்டாலினின் அடிவருடியாக செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த போது எங்கே சென்றார்கள்? அப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்று கூட தெரியாமல் வெளியில் பேசாமல் சுயநலத்தோடு மௌனம் காத்தவர்கள்தான் கம்யூனிஸ்ட் கட்சிகள்.

கடன் தொல்லையால் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு; பரிதவிப்பில் பச்சிளம் குழந்தைகள்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு சீட்டுகளும் 15 கோடி ரூபாய் பணமும் திமுகவிடமிருந்து பெற்றக்கொண்ட  இவர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதே இரண்டு சீட்டு 30 கோடி ரூபாய் பணம் பெறுவதற்கு காத்துக் கொண்டு இருக்கின்றனர். உண்மையான கம்யூனிஸ்ட் தொண்டர்களை குழி தோண்டி புதைக்கும் முத்தரசன் போன்றவர்களால் அதிமுகவை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. உண்டி தட்டி பிழைப்பு நடத்தும் செயல்தான் அவர்களுக்கு சரியாக இருக்குமே தவிர எங்கள் கட்சியை பற்றி பேசினால் சரியான பதிலடி கொடுப்போம் என்றார்.

பென்னாகரம் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவு? மாணவர்கள் அதிர்ச்சி

10 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர் விடப்பட்ட சாலை பணிகளில் ஊழல் முறைகேடு நடந்துள்ளது. இது பற்றி முதலமைச்சர் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios