காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான ரேஸ் கோர்ஸ் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் வாரத்தின் இறுதி நாட்களில் கார், பைக் பந்தயங்கள் நடைபெறுவது வழக்கம்.
சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் பைக்ரேஸில் பங்கேற்ற 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான ரேஸ் கோர்ஸ் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் வாரத்தின் இறுதி நாட்களில் கார், பைக் பந்தயங்கள் நடைபெறுவது வழக்கம்.
இதையும் படிங்க;- கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு!
இந்நிலையில், மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக் சார்பில் நடந்த 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான பைக் ரேஸ் போட்டி நடைபெற்றது. இதில் பெங்களூரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஸ்ரேயஸ் கோபாரம் ஹரிஸ் பங்கேற்றார். பைக் ரேஸின் 3வது சுற்றின் போது ஹரீஷ் எதிர்பராத விதமாக விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
இதையும் படிங்க;- அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி.. அவரது கருத்தை பெரிதாக எடுத்துக்க வேண்டாம்.. செல்லூர் ராஜு பதிலடி..!
இதையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து இன்றும் நாளையும் நடைபெறவிருந்த மீதமுள்ள போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.