Asianet News TamilAsianet News Tamil

எங்க கேப்டனுக்கு நான் தளபதியா இருப்பேன்!! சீனியர் வீரர் கொடுத்த உறுதியால் ரோஹித் உற்சாகம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 5 அணிகளில் ஏற்கனவே ஆடியுள்ளார். 
 

yuvraj singh wishes to reduce rohit sharmas pressure
Author
India, First Published Feb 10, 2019, 10:20 AM IST

மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்து ரோஹித் சர்மாவின் மீதுள்ள அழுத்தத்தை குறைக்க முயல்வேன் என்று யுவராஜ் சிங் உறுதியளித்துள்ளார். 

இந்திய அணியில் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் யுவராஜ் சிங், 2003, 2007, 2011 ஆகிய 3 ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் யுவராஜ் சிங் ஆடியுள்ளார். 2011 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். அந்த உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் தான் வென்றார். 2011 உலக கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே யுவராஜின் பங்களிப்பு அளப்பரியது. 

yuvraj singh wishes to reduce rohit sharmas pressure

அதேபோல ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி அரிய சாதனையை நிகழ்த்திய யுவராஜ் சிங், 2007ல் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றபோதும் முக்கிய பங்காற்றினார். இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ள யுவராஜ் சிங், கடந்த ஒன்றரை ஆண்டாக இந்திய அணியில் ஆடவில்லை. 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யுவராஜ் ஆடியதுதான் கடைசி. அதன்பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

yuvraj singh wishes to reduce rohit sharmas pressure

இந்திய அணியின் மாபெரும் சக்தியாக யுவராஜ் சிங் திகழ்ந்த காலத்தில் அதிகமான தொகைக்கு ஏலம்போன அவரை, இம்முறை அடிப்படை விலைக்குக்கூட எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இரண்டாம் கட்ட ஏலத்தில் யுவராஜின் அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 

யுவராஜ் சிங்கின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி, அவரை எடுத்துள்ளது. இதையடுத்து ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் யுவராஜ் சிங் இந்த சீசனில் ஆட உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல்லில் யுவராஜ் சிங் ஆட உள்ள ஆறாவது அணி. கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 5 அணிகளில் யுவராஜ் சிங் ஆடியுள்ளார். 

yuvraj singh wishes to reduce rohit sharmas pressure

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சிக்கல் இருந்துவருகிறது. அதனால் கடந்த சீசனில் கூட, தொடக்க வீரராக ஆடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மா, தொடரின் பாதியில் மிடில் ஆர்டரில் இறங்கினார். இவ்வாறு அந்த அணியில் மிடில் ஆர்டரில் சிக்கல் இருந்துவரும் நிலையில், மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி, ரோஹித் சர்மாவின் அழுத்தத்தை குறைக்க உள்ளதாகவும் அதன் மூலம் ரோஹித் சர்மா தனது இயல்பான ஓபனிங் பேட்டிங்கை ஆட உதவ உள்ளதாகவும் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

yuvraj singh wishes to reduce rohit sharmas pressure

யுவராஜ் சிங் அளித்துள்ள நம்பிக்கை ரோஹித் சர்மாவிற்கு உற்சாகத்தை அளித்திருக்கும். என்னதான் இருந்தாலும் சீனியர் வீரர் மட்டுமல்லாமல், ஒரு காலத்தில் எதிரணி பவுலர்களை ஓடவிட்ட அதிரடி பேட்ஸ்மேனும் அல்லவா? அதுமட்டுமல்லாமல் தினமும் தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios