இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை கார் விபத்தில் இருந்து காப்பாற்றிய இளைஞர் காதலியுடன் விஷம் குடித்தார். அவரது காதலி பரிதாபமாக உயிரிழந்தார்.
ரிஷப் பண்ட் கார் விபத்து
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட். இவர் கடந்த 2022ம் ஆண்டு டெல்லியிலிருந்து உத்தரகாண்டிற்கு சொகுசு காரில் சென்று கொண்டிருந்தபோது ரூர்க்கி அருகே கார் சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்தது. இதில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட், நீண்ட நாள் மருத்துவனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்த விபத்து காரணமாக நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடாத ரிஷப் பண்ட் அதன்பிறகு தான் அணிக்கு திரும்பினார்.
இந்த கோர விபத்தில் ரிஷப் பண்ட் உயிர்பிழைக்க முக்கிய காரணம் இரண்டு இளைஞர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தது தான். அதாவது ரிஷப் பண்ட் கார் விபத்துக்குள்ளாகி தீப்பிரித்து எரிந்தபோது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஜத் குமார் (25), அவரது நண்பர் நிஷு குமார் உதவியுடன் துரிதமாக செயல்பட்டு ரிஷப் பண்ட்டை காரில் இருந்து வெளியே இழுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உதவினார்கள்.
காம்பஸ் கருவியால் குத்தி ராகிங்; கேரளாவை மிரள வைத்த நர்சிங் கல்லூரி மாணவர்கள் கைது!!
தற்கொலை முயற்சி
இந்த இரண்டு இளைஞர்களுக்கும் தாங்கள் காப்பாற்றியது இந்திய கிரிக்கெட் வீரர் என்று தெரியாது. ரெண்டு பேரோட துணிச்சலையும் அனைவரும் பாராட்டினார்கள் விபத்தில் இருந்த குணமடைந்த ரிஷப் பணட் இருவருக்கும் பைக் பரிசாக வழங்கினார். இந்நிலையில், ரிஷப் பண்ட்டை கார் விபத்தில் இருந்து காப்பாற்றிய ரஜத் குமார் காதலியுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ரஜத் குமாரும், மனு காஷ்யப் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ரஜத் குமாரும், மனு காஷ்யப்பும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
காதலுக்கு எதிர்ப்பு
உடனடியாக இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் மனு காஷ்யப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ரஜத் குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரஜத் குமாரும், மனு காஷ்யப்பும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் தான் இருவரின் வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். ரஜத் குமார் மீது மனு காஷ்யபின் தாயார் போலீசில் புகாரும் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது.
WPL 2025: மகளிர் ஐபிஎல் நாளை தொடக்கம்! எந்த டீம் ஸ்ட்ராங்? எந்த டிவியில் பார்க்கலாம்?
