WPL 2025: மகளிர் ஐபிஎல் இன்று தொடக்கம்! எந்த டீம் ஸ்ட்ராங்? எந்த டிவியில் பார்க்கலாம்?
மகளிர் ஐபிஎல் 2025 தொடர் இன்று தொடங்குகிறது. இதில் எந்த அணி வலுவானது. போட்டிகளை எந்த டிவியில் பார்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

WPL 2025: மகளிர் ஐபிஎல் நாளை தொடக்கம்! எந்த டீம் ஸ்ட்ராங்? எந்த டிவியில் பார்க்கலாம்?
இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் உலகின் பணக்கார விளையாட்டு தொடர்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2025 சீசன் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. ஆண்களுக்கான ஐபிஎல் போன்று வீராங்கனைகளுக்கு Women's Premier League என்ற பெயரில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. பெண்கள் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 5 அணிகள் விளையாடுகின்றன.
மகளிர் பிரீமியர் லீக் 2025 தொடர் பிப்ரவரி 14ம் தேதி (இன்று) தொடங்குகிறது. வதோதராவில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆண்டு மகளிர் ஐபிஎல் போட்டி வதோதராவில் தொடங்கி பெங்களூரு, லக்னோ மற்றும் மும்பை என நான்கு இடங்களில் நடைபெறும். டெல்லியில் எந்த போட்டிகளும் நடைபெறாது.
மகளிர் ஐபிஎல்
ஆர்சிபி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஸ்ரேயங்கா பாட்டீல், எலிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், டெல்லி அணியில் மெக் லானிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷிகா பாண்டே, குஜராத் அணியில் பெத் மூனி, ஆஷ்லீக் கார்ட்னர், பிரகாஷிகா நாயக், உ.பி அணியில் சாமரி அதாபத், சோஃபி எக்லெஸ்டோன், ஸ்வேதா செஹ்ராவத் மற்றும் மும்பை அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜி கமலினி, சைகா இஷாக் என திறமையான வீராங்கனைகள் இருப்பதால் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
மகளிர் ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். Sports18 நெட்வொர்க் சேனலில் இந்த போட்டிகளை நேரலையில் பார்க்கலாம். ஜியோ சினிமா செயலியிலும் இந்த போட்டிகளை கண்டு ரசிக்கலாம்.
ஐபிஎல் 2025: ஆர்சிபி புதிய கேப்டன் அறிவிப்பு; அதிரடி வீரர்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
ஸ்மிருதி மந்தனா
குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வீராங்கனைகள்: ஆஷ்லே கார்ட்னர் (கேப்டன்), ஹர்லீன் தியோல், பிரகாஷிகா நாயக், பெத் மூனி, காஷ்வீ கெளதம், பிரியா மிஸ்ரா, பார்தி ஃபுல்மாலி, லாரா வால்வார்ட், சயாலி சாட்சார், டேனியல் கிப்சன், மன்னத் காஷ்யப், ஷப்னம் ஷகில், தயாளன் ஹேமலதா, டி சிம்பீல்ட், மேக்னா சிங், மேக்னா சிங் மற்றும் தனுஜா கன்வர்.
ஆர்சிபி அணி வீராங்கனைகள்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஆஷா சோபனா ஜாய், ஜோஷிதா விஜே, ரிச்சா கோஷ், டேனி வியாட், கனிகா அஹுஜா, சபினேனி மேகனா, ஏக்தா பிஷ்ட், கேட் கிராஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், எலிஸ் பெர்ரி, பிரேமா ராவத், ஜார்ஜியா பாஹம், ரேணுகா சிங் மற்றும் சோஃபி மோலினக்ஸ்.
ஜி கமலினி
டெல்லி கேபிடல்ஸ் அணி வீராங்கனைகள்: மெக் லானிங் (கேப்டன்), ஆலிஸ் கேப்ஸி, சாரா பிரைஸ், அனாபெல் சதர்லேண்ட், மின்னு மணி, ஷஃபாலி வர்மா, அருந்ததி ரெட்டி, என் சரணி, ஷிகா பாண்டே, ஜெமிமா ரோட்ரிக்ஸ், நந்தினி காஷ்யப், சினேகா தீப்தி, ஜெஸ் ஜோனாசென், நிகி பிரசாத், தனியா பாட்டியா, மார்ச்சிசேன் கப், ராதா யாதவ் மற்றும் டைட்டாஸ் சாது.
உபி வாரியர்ஸ் அணி வீராங்கனைகள்: சாமரி அதாபத் (கேப்டன்), அலனா கிங், கௌஹர் சுல்தானா, சைமா தாகூர், அலிஸ்ஸா ஹீலி, கிரேஸ் ஹாரிஸ், ஸ்வேதா செஹ்ராவத், அஞ்சலி சர்வானி, கிரண் நவ்கிரே, சோஃபி எக்லெஸ்டோன், ஆருஷி கோயல், கிராந்தி கவுட், தஹ்லியா மெக்ராத், ராஜேஸ்வரி கெய்க்வாட் மற்றும் பிருந்தா தினேஷ்
மும்பை இந்தியன்ஸ் அணி வீராங்கனைகள்: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அக்ஷிதா மகேஸ்வரி, பூஜா வஸ்த்ரகர், அமந்தீப் கவுர், ஹேலி மேத்யூஸ், சைகா இஷாக், அமன்ஜோத் கவுர், ஜிந்திமணி கலிதா, சஜீவன் சஜனா, அமெலியா கெர், கீர்த்தனா பாலகிருஷ்ணன், சமஸ்கிருதி குப்தா, க்ளோ ட்ரையோன், நாடின் டி கிளர்க், ஷப்னிம் இஸ்மாயில், ஜி கமலினி, நடாலி ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் யாஸ்திகா பாட்டியா.
உடல்நிலை குறித்து முதன்முறையாக மனம்திறந்த ஜஸ்பிரித் பும்ரா; ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!