உடல்நிலை குறித்து முதன்முறையாக மனம்திறந்த ஜஸ்பிரித் பும்ரா; ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இருந்து விலகிய பிறகு, ஜஸ்பிரித் பும்ரா தனது உடல்நிலை குறித்து ரசிகர்களுக்கு அப்டேட் செய்துள்ளார்.

உடல்நிலை குறித்து முதன்முறையாக மனம்திறந்த ஜஸ்பிரித் பும்ரா; ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!
முதுகுவலி காரணமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025ல் இருந்து விலகிய பிறகு ஜஸ்பிரித் பும்ரா முதன்முறையாக உடல்நிலை குறித்து பேசியுள்ளார். பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) எடுத்த செல்ஃபி புகைப்படத்தைப் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதனுடன் 'மீண்டும் கட்டமைத்தல்' என்ற வார்த்தையை அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது அவர் காயத்தில் இருந்து மீண்டு வலிமையுடன் உருவாகுகிறேன் என்பதுபோல் அவர் பதிவிட்டுள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா
பும்ரா பழுப்பு நிற டீசர்ட், மேட்சிங் ஜாக்கெட், கருப்பு ஷார்ட்ஸ் மற்றும் பழுப்பு நிற தொப்பி அணிந்து கண்ணாடியின் முன் நின்று செல்ஃபி எடுத்துள்ளார். ஜஸ்பிரித் பும்ராவின் இந்த செல்பி ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ''நீங்கள் மீண்டும் இந்திய அணிக்கு வலியிமையுடன் திரும்ப வேண்டும்'', ''உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று ரசிகர்கள் பும்ராவின் செல்பிக்கு கீழே கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி டெஸ்டில் ஏற்பட்ட முதுகுவலி காரணமாக பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகியுள்ளதாக செவ்வாய்க்கிழமை பிசிசிஐ அறிவித்தது. இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா அவருக்கு மாற்றாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2021ல் புறக்கணிப்பு; 2025ல் ஆர்சிபி கேப்டன்; யார் இந்த ரஜத் படிதார்? கேப்டனானது எப்படி?
சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இல்லை
ஜஸ்பிரித் பும்ரா என்சிஏவில் பயிற்சியை முடித்தாலும் அவரது உடற்தகுதி நிச்சயமற்றதாகவே உள்ளது என்று தலைமை பிசியோ துளசி மற்றும் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் ரஜினிகாந்த் தலைமையிலான என்சிஏ மருத்துவக் குழு அறிக்கை சமர்ப்பித்த பிறகு, அவரை நீக்குவதற்கான முடிவை பிசிசிஐ எடுத்தது.
“அவர் தனது மறுவாழ்வை முடித்துவிட்டார் என்றும், அவரது ஸ்கேன் அறிக்கைகள் நன்றாகத் தெரிகிறது என்றும் என்சிஏ தலைவர் நிதின் படேல் அனுப்பிய அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் போட்டி தொடங்கும் நேரத்தில் அவர் பந்துவீச தகுதியுடன் இருப்பாரா? என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனவே, தேர்வாளர்கள் எந்த ஆபத்தையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தனர்,” என்று பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் விளையாடும் பும்ரா
சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக இருந்தாலும், ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பும்ரா மீண்டும் களமிறங்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் மாத இறுதியில் தொடங்கும் ஐபிஎல் சீசனுக்குள் அவர் முழு தீவிரத்துடன் பந்துவீச தயாராக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
இது கிரிக்கெட் வட்டாரங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளது. பும்ராவும் இந்திய அணி நிர்வாகமும் தேசிய போட்டிகளை விட ஐபிஎல் 2025க்கு எப்படி முன்னுரிமை அளிக்கலாம்? என்ற கேள்விகளை நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி.
Jasprit Bumrah: ஸ்கேன் ரிப்போர்ட் சாதகமாக இருந்தும் பும்ராவை இந்திய அணியில் எடுக்காதது ஏன்?