MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Jasprit Bumrah: ஸ்கேன் ரிப்போர்ட் சாதகமாக இருந்தும் பும்ராவை இந்திய அணியில் எடுக்காதது ஏன்?

Jasprit Bumrah: ஸ்கேன் ரிப்போர்ட் சாதகமாக இருந்தும் பும்ராவை இந்திய அணியில் எடுக்காதது ஏன்?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ள நிலையில், ஸ்கேன் ரிப்போர்ட் சாதகமாக இருந்தும் அவர் இந்திய அணியில் எடுக்கப்படாதது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Rayar r
Published : Feb 13 2025, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jasprit Bumrah: ஸ்கேன் ரிப்போர்ட் சாதகமாக இருந்தும் பும்ராவை இந்திய அணியில் எடுக்காதது ஏன்?

Jasprit Bumrah: ஸ்கேன் ரிப்போர்ட் சாதகமாக இருந்தும் பும்ராவை இந்திய அணியில் எடுக்காதது ஏன்?

'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தும் நிலையில், இந்தியா அங்கு செல்ல மறுத்து விட்டதால் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும். 

உலகக்கோப்பைக்கு அடுத்த பெரிய தொடர் என்பதால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றி பெற இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் தீவிரமாக உள்ளன. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. 

24
ஜஸ்பிரித் பும்ரா

ஜஸ்பிரித் பும்ரா

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிட்னி டெஸ்டின் முதல் இன்னிங்ஸின் போது ஜஸ்பிரித் பும்ரா முதுகுப் பகுதியில் காயம் அடைந்தார். காயத்தின் தீவிரத்தை புரிந்து கொள்ள உடனடியாக ஸ்கேன் எடுக்க மருத்துவமனைக்குச் சென்றார். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்து வீச வரவில்லை. இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடரிலும் அவர் விளையாடவில்லை. 

ஆனால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். பும்ராவின் காயம் குறித்து மருத்துவக் குழுவினரின் தகவ‌லுக்கு பிசிசிஐ காத்திருந்தது. இதற்கிடையே ஜஸ்பிரித் பும்ரா இன்னும் 2 நாட்களில் பெங்களூருவில் உள்ள தேசிய மறுவாழ்வு அகாடமியில் (NCA)பயிற்சி பெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், பும்ரா முக்கியமான தொடரில் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இந்தியா! கடைசி ODIயில் இமாலய வெற்றியை பதிவு செய்த ரோகித் படை

34
சாம்பியன்ஸ் டிராபி 2025

சாம்பியன்ஸ் டிராபி 2025

மேலும் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா விளையாடாதது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''வெளிப்படையாக நாங்கள் பும்ராவை மிகவும் விரும்பினோம். அவரால் பெரிய தொடர்களில் என்ன செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும், அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர். ஆனால் சில விஷயங்கள் நமது கைகளில் இல்லை'' என்றார்.

44
ஜஸ்பிரித் பும்ரா காயம்

ஜஸ்பிரித் பும்ரா காயம்

தொடர்ந்து பேசிய கவுதம் கம்பீர், ''பும்ரா இடம்பெறவில்லை என வெளிப்படையாக அறிவித்துள்ளோம். ஆனால் அவர் தொடர்பான அனைத்து விவரங்களையும் உங்களுக்குச் சொல்ல முடியாது. ஏனெனில் பும்ரா எவ்வளவு காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்பது மருத்துவ குழுவினர் தான் சொல்ல வேண்டும். பும்ரா இல்லாவிட்டாலும் ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற சில இளைஞர்கள் தங்கள் கைகளை உயர்த்தி நாட்டிற்காக ஏதாவது செய்ய இது ஒரு வாய்ப்பு. சில நேரங்களில் நீங்கள் தேடும் நல்ல வாய்ப்புகள் இவைதான்'' என்று கூறினார்.

காயத்தால் அவதிப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) அனுமதிக்கப்பட்டு ஸ்கேன் எடுத்து முழுமையாக குணம் அடைந்தார். ஸ்கேன் அறிக்கைகள் அவரது முதுகில் ஏற்பட்ட காயம் 'சரி' என்று தெரிவித்த போதிலும், தேர்வாளர்கள் அவரது காயத்தால் ரிஸ்க் எடுக்க விரும்பாததால் பும்ராவை தேர்வு செய்யவில்லை. ஏனெனில் பும்ரா விரைவில் முழு பந்துவீச்சுக்கு தயாராக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் ஸ்டார்களை நேரலையில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி
 

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI: இந்தியாவுக்கு முக்கியமான போட்டி; ஒருவேளை மழையால் ரத்தானால் என்னாகும்? அரையிறுதி வாய்ப்பு பறிபோகுமா?
Recommended image2
ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்தியா.. அரையிறுதி செல்ல இனி என்ன செய்ய வேண்டும்?
Recommended image3
ஹர்திக், அபிஷேக், திலக் ருத்ரதாண்டவம்.. தெறிக்க விட்ட இந்தியா.. 4 ரன்னில் உலக சாதனை மிஸ்ஸிங்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved