இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இந்தியா! கடைசி ODIயில் இமாலய வெற்றியை பதிவு செய்த ரோகித் படை
இந்தியா, இங்கிலாந்து இடையேயான மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி ஒரு நாள் தொடரை ஒயி்ட்வாஷ் செய்தது.

இந்தியா, இங்கிலாந்து இடையோன மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் ஷர்மா 1 ரன்னில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில், விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்திய அணி சார்பில் சுப்மன் கில் சதம் விளாசி 112 ரன்கள் குவித்தார். அடுத்ததாக விராட் கோலி 52 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களும் சேர்த்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்கள் குவித்தது.
357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் எந்த வீரரும் பெரிய ஸ்கோரைப் பதிவு செய்யவில்லை. தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் அந்த அணி வெறும் 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியா இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. முன்னதாக முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப் பெற்றிருந்த நிலையில் இந்தியா இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது.
இந்திய அணி சார்பில் அக்ஷர் படேல், அர்ஸ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி தந்தனர். சதம் விளாசிய சுப்மன் கில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.