டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் ஸ்டார்களை நேரலையில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி
1xBet இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸின் முன்னணி வீரர்கள் சவ் மகாராஜ், மேத்யூ பிரீட்ஸ்கே மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோருடன் நடத்தப்பட்ட நேரலை உரையாடல் நிகழ்ச்சி கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சுவையான விருந்தாக அமைந்தது. அவர்கள் தங்கள் கிரிக்கெட் பயணம், SA20 சீசன் அனுபவம் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து வெளிப்படையாகப் பேசினர்.

2025ஆம் ஆண்டு SA20க்கான அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சரான 1xBet இன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட, டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸின் முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு நடத்தப்பட்ட சமீபத்திய நிகழ்ச்சி கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சுவையான விருந்தாக அமைந்தது. வைஸ் ஜோக்கராக அணியை வழிநடத்தும் கேப்டன் கேசவ் மகாராஜ், சமீபத்தில் ஒரு புதிய பொழுதுபோக்கை (துப்பாக்கிச் சுடுதல்) விளையாடும் மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஆறு வயதில் தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாற முடிவு செய்த கேன் வில்லியம்சன் ஆகியோர் இந்த SA20 சீசனில் தங்கள் அனுபவம், அவர்கள் எவ்வாறு தொழில்முறை கிரிக்கெட் வீரர்களானார்கள், கிரிக்கெட்டின் எதிர்காலம் மற்றும் கிரிக்கெட் அல்லாத பிற விருப்பங்கள் குறித்து அவர்கள் வெளிப்படையாகப் பேசினர்.
நட்சத்திரங்களாக மாறிய குழந்தைகள்
ஒவ்வொரு வீரருக்கும் கிரிக்கெட்டில் ஒரு தனித்துவமான பயணம் இருந்தது, ஆனால் அவர்களின் கதைகள் அனைத்திலும் பொதுவான ஒரு விஷயம் இருந்தது: அவர்கள் ஒரு தொழில்முறை விளையாட்டு வீரராக மாற விரும்புவதை உணர்ந்த ஒரு தருணம்.
கேசவ் மகாராஜுக்கு, இந்த தருணம் அவர் 7 வயதில் கிங்ஸ்மீட்டுக்கு முதன்முதலில் சென்றபோது வந்தது. அப்போதுதான் அவர் தனக்குள்ளே சொல்லிக்கொண்டார்: “நான் டிவியில் கிரிக்கெட் விளையாடும் ஒருவராக இருக்க விரும்புகிறேன்”. கேன் வில்லியம்சனுக்கும் இதே போன்ற ஒரு அனுபவம் ஒன்று ஏற்பட்டது. 7 அல்லது 8 வயதில், அவர் முதன் முதலில் ஒரு போட்டியைக் காண சென்றார், அப்பொழுது டேனியல் வெட்டோரியுடன் ஒரு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டார். பின்னர், கேன் வெட்டோரியுடன் சேர்ந்து அதே அணியில் விளையாடும்போது, இந்தக் கதையை வெட்டோரிக்கு நினைவூட்டி இன்ப அதிர்ச்சி அளித்தார்.
மேத்யூ ப்ரீட்ஸ்கேவுக்கு ஆறு வயதாக இருந்தபோது,உடை மாற்றும் அறையில் ஜாக் காலிஸுடன் அவரது வாழ்க்கையையே மாற்றும் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. "அது என் கண்ணோட்டத்தையும் நான் என்னவாக இருக்க விரும்பினேன் என்பதையும் மாற்றியது. அது என்னை ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது," என்று ப்ரீட்ஸ்கே ஒப்புக்கொள்கிறார்.
தனது தந்தை எவ்வாறு கிரிக்கெட் விளையாடினார், குழந்தையாக இருந்தபோது பின்புற முற்றத்தில் எவ்வாறு பயிற்சி செய்தார் என்பது பற்றி வில்லியம்சன் பேசினார். தொழில்முறை கிரிக்கெட்டை நோக்கிய அவரது பயணம் எளிதானதாக இல்லாவிட்டாலும், விடாமுயற்சியும் விளையாட்டின் மீதான அன்பும் அவருக்கு உதவியது. மஹராஜ் தனது எடை மற்றும் பிட்னஸ்க்காக எவ்வாறு போராடினார், இது அவரை மேலும் வலிமையாக்கி, விடாமுயற்சியுடன் இருக்கக் கற்றுக் கொடுத்தது என்பதைப் பற்றிப் பேசினார். தனது மூத்த சகோதரர் மற்றும் தந்தையிடமிருந்து அவர்களது திறமைகளைப் பார்த்து ப்ரீட்ஸ்கே கற்றுக்கொண்டுள்ளார், மேலும் தொழில்முறை விளையாட்டின் முக்கிய சவாலான குடும்பத்தை விட்டு நீண்ட காலம் விலகி இருத்தலை எதிர்கொள்வது தற்போதும் அவருக்கு கடினமாக உள்ளது.
அவர்களின் குழந்தைப் பருவ ஹீரோக்கள் பற்றி கேட்டபோது, சில புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களின் பெயர்களைக் கூறினர். ப்ரீட்ஸ்கே ஏபி டி வில்லியர்ஸ், ஆண்ட்ரூ கோலி மற்றும் ஜாக் காலிஸ் ஆகியோரைத் தேர்ந்தெடுத்தார். வில்லியம்சன், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் மற்றும் காலிஸைப் பற்றி குறிப்பிட்டார். மகாராஜூம் தனது பதிலில் சச்சின் டெண்டுல்கரைக் குறிப்பிட்டார்.
அவர்களை மாற்றிய வெற்றிகள்
ஒவ்வொரு வீரரும் தங்கள் மனதில் பதிந்த ஒரு சிறப்பான தருணத்தைப் பற்றிப் பேசினர். டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இணைந்து தனது முதல் வெற்றியைப் பெற்றார் பிரீட்ஸ்கே, அவரது பேட்டிங் திறமையே அணிக்கு வெற்றியை சேர்த்தது. மகாராஜுக்கு, தான் தந்தையான தருணம்: “அது என்னை அமைதிப்படுத்தி, வாழ்க்கையைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தை எனக்குக் கொடுத்தது.” ஜெயண்ட்ஸுடனான தனது முதல் வெற்றிக்குப் பிறகு, அணியின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஐந்து கப் எலுமிச்சை ஜூஸை எப்படிக் குடிக்க வேண்டியிருந்தது என்பது பற்றிய ஒரு வேடிக்கையான கதையை வில்லியம்சன் பகிர்ந்து கொண்டார்.
SA20: கலவையான உணர்ச்சிகள்
SA20 சீசனின் சூழல் தனித்துவமானது என்றும், ரசிகர்களின் ஆதரவை எப்போதுமே அவரால் உணர முடியும் என்றும் கேன் வில்லியம்சன் குறிப்பிட்டுள்ளார். “குறிப்பாக SA20 வியக்கத்தக்க அளவிற்கு நல்ல ஆதரவைப் பெற்றுள்ளது, மேலும் ஒவ்வொரு அணிக்கும் ரசிகர் பட்டாளம் விரைவாக உருவாகியுள்ளது. எனவே, எனது முதல் ஆண்டில் இங்கு வந்து அதைப் பார்ப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது, உலகின் வெவ்வேறு பகுதிகளில் நீங்கள் அதை வெவ்வேறு விதமாக பார்க்கமுடியும். நீங்கள் இந்தியாவுக்குச் செல்லுங்கள், இந்திய மக்களுக்கு கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் நிகரற்றது, கிரிக்கெட்டை விரும்பும் ஒரு பெரும் மக்கள் கூட்டம் அங்கு உள்ளது, எனவே இத்தகைய வாய்ப்புகளைப் பெறுவதும் சிறப்பு வாய்ந்தது”.
SA20 சீசன் தங்களுக்கு கடினமாக இருந்தது என்பதை வீரர்கள் வெளிப்படையாகவே தெரிவித்தனர். "நாங்கள் சரியாக கிரிக்கெட் விளையாடவில்லை என்ற ஏமாற்றம் எங்களுக்கு இருந்தது, ஆனால் எல்லாமே ஒரு காரணத்திற்காகவே நடக்கும்," என்று மஹராஜ் கூறியுள்ளார். இருப்பினும், ரசிகர்கள் எங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை அணியால் உணர முடிகிறது, அது உண்மையிலேயே பாராட்டக்கூடியது.
“அனைத்து ரசிகர்களுக்கும், அனைத்து அன்புக்கும் ஆதரவிற்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றி. இந்த தொடரில் எங்களுக்கு அளித்த அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குவீர்கள் என்றும், அடுத்த ஆண்டு இதே போன்று பத்து மடங்கு ஆதரவை எங்களுக்கு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம். மேலும், விரைவில் நீங்கள் மகிழ்ச்சியடையுமாறு ஒன்றை வழங்குவோம் என்று நம்புகிறோம்”,டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கூறினார்.
கிரிக்கெட் அணியின் ஒற்றுமை மற்றும் ஆதரவு
அணியின் சூழ்நிலையைப் பொறுத்தவரை, ப்ரீட்ஸ்கே அதை நெருக்கமானது என்று விவரித்தார், அதற்கு மகாராஜ், “அது வேடிக்கையான ஒன்று என நினைக்கிறேன்” என்று பதிலளித்தார். இந்த கிளப் ஒரு குடும்பம் போல செயல்படுகிறது என்று கேப்டன் கூறினார்: “நாங்கள் அதை ஒரு குடும்பம் போல நடத்துகிறோம், மிகவும் இணைக்கப்பட்டிருக்கிறோம், எங்களால் முடிந்தவரை; நாங்கள் ஒரு குழுவாக நிறைய விஷயங்களைச் செய்கிறோம் என்று நினைக்கிறேன். இது ஒரு ஏமாற்றமளிக்கும் சீசன், தற்போதும் எங்கள் அணி மீது நிறைய மக்களின் ஈடுபாடும், சூப்பர் ஜெயண்ட்ஸின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் மக்களும் உள்ளனர், எனவே குடும்பம் என்று கூறுவது எங்களை சிறப்பாக விவரிக்கிறது என்று கூறுவேன்”.
இந்தப் பகுதியில் கிரிக்கெட்டின் வளர்ச்சியிலும் இந்த கிளப் கவனம் செலுத்துகிறது, குழந்தைகளை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிப்பதுடன், இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.
"எங்களிடம் சமூகத்திற்கான நிறைய திட்டங்கள் உள்ளன, அங்கு பல்வேறு பகுதிகளை அடைந்து, கிரிக்கெட்டை வளர்க்க முயற்சிக்கிறோம். நிதியியல் தொடர்பான பல விஷயங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பல பொருட்கள் இதில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. கிரிக்கெட் விளையாடுவதன் அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள குழந்தைகளை மைதானத்திற்குள் அழைத்துச் செல்ல வேண்டும், ”என்று கேசவ் மகாராஜ் கூறுகிறார்.
ஆயத்தமாகுதல் மற்றும் உந்துசக்தி
அணியின் பயிற்சியாளர் பெற்றுள்ள அனுபவத்தைப் பற்றி வில்லியம்சன் வலியுறுத்தி கூறினார், அவர் விளையாடிய பருவத்தின் கடினமான தருணங்களிலும் வீரர்கள் உத்வேகத்துடன் இருக்க அவர் உதவினார். "ஒவ்வொரு போட்டிக்கும் நாங்கள் தெளிவான மனநிலையுடன் தயாராகி, எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாட முயற்சிக்கிறோம்," என்று அவர் கூறினார்.
பெரிய இலக்குகளை அவர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள், அந்த தருணங்களில் அவர்களுக்கு என்ன மாதிரியான எண்ணங்கள் இருக்கும் என்பது குறித்த ரசிகர்களின் கேள்விக்கு, மேத்யூ பிரீட்ஸ்கே பதிலளித்ததாவது: “அணியில் நம் அனைவருக்கும் வெவ்வேறு பங்கு உண்டு, ஒரு பேட்ஸ்மேனாக அணியை மோசமான ஆட்டத்தில் நல்ல தொடக்கத்திற்கு அழைத்துச் செல்வதே என்னுடைய பங்கு. நான் அதிர்ஷ்டசாலியாக அந்த ஃபவுல் பிளேவை கடந்து வந்து விட்டால், பின்னர் ரன் ரேட்டைத் தக்க வைத்துக் கொண்டு, சேஸில் இருக்க முயற்சிப்பேன் என்று நினைக்கிறேன்.”
கிரிக்கெட் மற்றும் அதன் எதிர்காலம்
கிரிக்கெட் அதன் அடிப்படைக்குத் திரும்பும் அதே வேளையில், கிரிக்கெட் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது, என்று கேன் வில்லியம்சன் குறிப்பிட்டார். இளம் ரசிகர்களிடையே டி20 வடிவம் பிரபலமாக உள்ளதையும், உலகளாவிய சூழலில் அதன் வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். “டி20 வடிவம் வியத்தகு அளவிற்கு பிரபலமாகி உள்ளது, மேலும் இது உண்மையில் இளைஞர்களையும் ஈர்க்கிறது என்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம். எனவே இது இங்கு நீடித்து இருக்க வேண்டும், மேலும் பிரஞ்சைஸ் தொடர்கள் இப்போது ஆண்டு அட்டவணையின் ஒரு பெரும் பகுதியாக உள்ளன, மேலும் இது சர்வதேச கிரிக்கெட்டுடன் எவ்வாறு இணைந்து செயல்படுகிறது மற்றும் எந்த வடிவங்களில் விளையாடப்படுகிறது என்பதைப் பொறுத்து இருக்கும் என்று நான் நினைக்கிறேன்”
எதிர்காலத்தில், புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்படலாம், ஒருவேளை ஒளிரும் எல்லைக் கயிறுகள் அல்லது ஒளிரும் தலைக்கவசங்கள் உருவாக்கப்படலாம் என்று மகாராஜ் மேலும் கூறினார். தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, ஏற்கனவே நிறைய மாறி வருகிறது, ஆடுகளத்திற்கான LED எல்லை விளக்குகள் போன்றவை விளையாட்டைப் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றுகின்றன.
இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான தனிப்பட்ட சவால்கள் மற்றும் ஆலோசனைகள்
ஒவ்வொரு வீரரும் தங்கள் தொழில் வாழ்க்கையில் கடினமான தருணங்களை எதிர்கொண்டுள்ளனர். பங்களாதேஷில் முதன்முதலில் விளையாடியது எதிர்பார்க்காத ஒன்று என்று ப்ரீட்ஸ்கே குறிப்பிட்டார், மேலும் நான்கு இன்னிங்ஸ்களின் முடிவில் ஒரு கடினமானமேற்பரப்பைக் கொண்ட ஆடுகளம் இருந்தது அவரின் தோல்விக்கு வழிவகுத்தது. இது ஒரு பெரிய சவாலாக இருந்தது, ஆனால் தனது திறமைகளை நிரூபிக்க மற்றொரு வாய்ப்பு தனக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அவரது விருப்பத்தை இது வலுப்படுத்தியது.
அதிக எதிர்பார்ப்புகள் மற்றும் குறிப்பிட்ட சூழ்நிலைகள் அவரது சுழற்பந்து வீச்சைப் பாதித்ததால், இந்திய சுற்றுப்பயணம் ஒரு உண்மையான சவாலாக இருந்தது என மஹராஜ் தனது முதல் இந்திய சுற்றுப்பயணத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். இருப்பினும், அவரது அனுபவம் அவரை மேலும் புத்திசாலியாக்கி, ஒவ்வொரு சவாலையும் வளர்ச்சிக்கான வாய்ப்பாக பார்க்க அவருக்குக் கற்றுக் கொடுத்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தனது அணி சர்வதேச அளவில் தோல்வியடைந்த தனது ஆரம்பகால அனுபவத்தை வில்லியம்சன் நினைவு கூர்ந்தார். இந்த தருணம் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டின் தரத்தைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத்திற்கான சில உயர்ந்த இலக்குகளை நிர்ணயிக்கவும் உதவியுள்ளது.
ஏராளமான அனுபவமும், ஏராளமான சவால்களும் கற்றுக்கொண்டு வெற்றி பெற்றதால், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். கேன் வில்லியம்சன் கூறியுள்ளதாவது: "நீங்கள் செய்வதை நீங்கள் நேசிக்க வேண்டும், அதற்கு ஒரு உந்துசக்தியாக இருக்க வேண்டும். அந்த உந்துதல் உங்களுக்குள்ளேயே இருந்து, அதன் மீது ஒரு காதல் இருக்கும்போது, அங்கே உண்மையான விடாமுயற்சி இருக்கும், மேலும் நீங்கள் அந்தக் கடினமான பாதையில் சென்று நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதைப் பார்க்கத் தயாராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தொடர்ந்து முன்னேறி செல்வதிலும், கடினமாக உழைத்துக்கொண்டே இருப்பதிலும் சிறிது உங்களுக்கு மகிழ்ச்சி இருந்தால், நீங்கள் அதிக விருப்பத்துடன் ஈடுபடுவீர்கள்”.
கேசவ் மகாராஜ் மேலும் கூறியாதாவது: “வேறொருவரைக் குறை கூறுவதற்குப் பதிலாக, உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்வதற்கான ஒரு வழியைக் கண்டறியவும். அதுதான் வெற்றியை அடைவதற்கான வழி. ”
டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால், பயிற்சிக்கு யார் எப்போதும் தாமதமாக வருகிறார்கள் அல்லது யார் அதிகம் பேச விரும்புகிறார்கள், அல்லது அணியின் தலைவர் கேசவ் மகாராஜூக்குப் பிடித்த உணவுகள் போன்றவை,1xBet இன் இன்ஸ்டாகிராம் சந்திப்பில் வீடியோவைப் பார்த்து வாழ்த்துங்கள்.
1xBet நிறுவனத்தைப் பற்றிய அறிமுகம்
1xBet என்பது, பந்தயத் துறையில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட 18 ஆண்டுகளாக இயங்கி வரும் பந்தயம் நடத்தும் ஒரு நிறுவனமாகும். இந்த பிராண்டின் வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கான விளையாட்டு நிகழ்வுகளின் மீது பந்தயம் கட்டலாம், இந்த நிறுவனத்தின் இணையதளம் மற்றும் செயலி 70 மொழிகளில் உள்ளது. 1xBet நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கூட்டாளர் பட்டியலில் FC Barcelona, Paris Saint-Germain, LOSC Lille, La Liga, Serie A, Durban's Super Giants மற்றும் பிற புகழ்பெற்ற விளையாட்டு பிராண்டுகளும் நிறுவனங்களும் உள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், நடிகை ஊர்வசி ரவுடேலா ஆகியோர் இந்தியாவில் இந்நிறுவனத்தின் தூதர்களாக உள்ளனர். IGA, SBC, G2E Asia, மற்றும் EGR Nordics போன்ற மதிப்புமிக்க தொழில்முறை விருதுகள் மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டு, அந்த விருதுகளைப் நிறுவனம் பெற்றுள்ளது.

